Archive

Posts Tagged ‘tools’

காது குடைவது ஆனந்தம்..

January 31st, 2010 No comments

காது குடைவதின் ஆனந்தம் இணையற்றது. சிந்தித்து பார்த்தால், சின்னஞ்சிறு வயதிலிருந்தே காதை குடைந்தெடுத்திருக்கிறேன். எண்ணிப் பார்த்தால் பலதரபட்ட உபகரணங்களை உபயோகித்திருப்பது தெரியவருகிறது. அதில் சில இதோ:-

  • துடைப்பங்குச்சி
  • பாய் குச்சி
  • ஊக்கு
  • கொண்டைஊசி
  • சுண்டுவிரல்
  • துணியின் நுணி
  • பென்சில்
  • பென்
  • பல் துலக்கும் பிரஷின் பின்பகுதி
  • மூக்கு கண்ணாடியின் சட்டம்
  • திருப்புளி (ஆபத்தானது)
  • சாவி
  • வயரின் உரை (sleeve)
  • உருட்டிய காகிதம் (மிக பிரபலம்)
  • Buds (எனக்கு பிடிக்காது!)
  • காக்கை/கோழி இறகு
  • பலப்பம் குச்சி