Oil Cooler Assembly for Royal Enfield Thunderbird 350 AVL












என்னுடைய Thunderbirdன் Silencer பழுதடைந்தது. மாற்ற வேண்டி சென்னை Taylor’s Roadல் உள்ள சௌந்தரராஜன் மெகானிக் கடையின் ராஜு என்ற மெகானிக்கிடம் சென்றேன். அவர் Silencerஐ சோதித்து பார்த்துவிட்டு மாற்றித்தான் ஆகவேண்டும் என்று பரிந்துரைத்தார். அப்போது, இந்த Freeflow Silencer போட்டால் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் கொடுத்த பதில் இதோ:-
ஒருவன் சத்தமாக தொண்டை கிழிய அலறினால் என்ன ஆகும்? தொண்டை நிரந்திரமாக பழுதடையும்; அதேபோல Freeflow Silencer போட்டால் இஞ்சினின் செயல்பாடு பழுதடையும், ஆயுள் குறையும் என்றார்!
ஆமாம், freeflow silencer போட்டால் பவர் (BHP) கூடுவது உண்மையே. அதேபோல mileageம் குறையும். ஏனெனில் அதிகமாக எரிபொருள் இஞ்சினிற்கு உள்ளே சென்று எரிந்து வேகமாக வெளியேரும். அதனோடு சரியாக எரியாத எரிபொருளும் வெளியேரும். Freeflowவினால், முழுமையான எரிதலை உறுதிபடுத்த முடியாது. அதனால் எரிபொருள் விரையமாகும், mileage குறையும். மேலும் freeflow silencerலிருந்து வெளிப்படும் புகையானது (கண்ணுக்கு தெரியவேண்டும் என்று அவசியமில்லை) emission standardsக்கு ஒவ்வாது.
திருமுல்லைவாயிலிலிருந்து ஊத்துகோட்டை செல்ல திருநின்றவூர்-பாக்கம்-வெங்கல்-சீத்தஞ்சேரி வழியாகவும் செல்லலாம். வெங்கல்-சீத்தஞ்சேரி சாலை ஊத்துக்கோட்டை பாதுகாக்கப்பட்ட காட்டின் வழியாக செல்லும். இச்சாலையில் நடமாட்டம், வண்டிகள் மிகக்குறைவு. என்னுடைய Thunderbirdல் நான் போகும் போது எடுத்தப்படம்.
Powered by ScribeFire.