கால்கள் மரத்து போனால்..
கால்கள் மரத்துப் போனால்,
எச்சில் தொட்டு கால் கட்டை விரலில் தடவ,
கால்கள் இயல்பு நிலைக்கு வேகமாக திரும்பும்.

கால்கள் மரத்துப் போனால்,
எச்சில் தொட்டு கால் கட்டை விரலில் தடவ,
கால்கள் இயல்பு நிலைக்கு வேகமாக திரும்பும்.

ரோமம் நிறைந்தவன் உணர்ச்சிவயப்படுவான்,
ரோமம் அற்றவன் அதீத சுயநலவாதியாவான்,
வலது தோளில் மச்சமுள்ளவன் அதிட்டசாலி,
இடது தோளில் மச்சமுள்ளவன் போராளி,
லிங்கத்தில் மச்சமுள்ளவன் போகி,
கர்மத்தின் இச்சையுள்ளவன் யோகி,
பின்னலுள்ள உள்ளங்கையுடையான் குழப்பமடைவான்,
பின்னலில் உள்ளம் தொலைத்தவன் இன்னலடைவான்,
இல்வாழ்வு துறந்து ஞானத்தேடல் கடிது,
இல்வாழ்வு இருந்து ஞானத்தேடல் எளிது,
மனையாள் மனைவியாயிருத்தல் லவ்கீகம்,
மனையாள் துணைவியாயிருத்தல் ஆன்மீகம்,
தந்தையின் கர்மம் தமையனைச் சேரும்,
தமையன் முக்தம் வரை தந்தைக்கு முற்று அன்று,
சந்தானபேறு ஒரு கடமையே ஆகும்.

மார்பு மயிரற்ற ஆணையும்,
மார்பு சிறுத்த பெண்னையும்,
கண்மூடி நம்பாதே.
கழுத்து நீண்ட,
கண் சிவந்த,
சொல் திக்கிய,
உடல் குறுத்த,
உதடு தடித்த,
ஆட்டு தாடியுடைய,
ஆடவரை கண்மூடி நம்பாதே.

ஈர்ப்பே ஈசனின் ஈசத்வமாகும்,
ஈர்ப்பே வினையின் முதலாகும்,
ஈர்ப்பே ஓட்டத்தின் கர்த்தாவாகும்,
ஈர்ப்பே சுழற்சியின் வித்தாகும்,
ஈர்ப்பே பிறப்பின் மூலமாகும்,
ஈர்ப்பே ஓங்காரத்தின் பலனாகும்,
ஈர்ப்பே உறவுவின் உரமாகும்,
ஈர்ப்பே உயர்வின் ஏணியாகும்,
ஈர்ப்பே வழிபாட்டின் எதிர்பயனாகும்,
….
…

அழகு ஒரு உணர்வே அன்றி பொருள்ளல்ல,
அழகு காலத்தின் அடிமையே அன்றி வேறல்ல,
அழகு கண்ணோட்டத்தில் மட்டுமே நில்லே,
அழகு கண்கெட்டோர்க்கு வெறும் சொல்லே,
அழகு செழுமையிலும் உண்டு,
அழகு வெறுமையிலும் உண்டு,
அழகு காரணியான உறவு நிலைக்காது,
அழகு பூரணியான தாய்மை பொய்க்காது,
அழகு ஆடவரின் ஆற்றலை அளக்கும்,
அழகு பெண்டிரின் பொருமையை அளக்கும்,
அழகு அருணையின் ஒளிகீற்று,
அழகு பொருணையின் நீறூற்று,
அழகு அகத்தின்பால் இருக்க ஈர்க்கும்,
அழகு புறத்தின்பால் இருக்க நீர்க்கும்,
அழகு ஈர்ப்பின் மற்றொரு முகவரி,
அழகு எல்லா வினையின் மூலவரி,
அழகு (வடிவத்தின்) ஆசை இரட்டைகிளவி,
அழகு (வடிவத்தின்) ஆணவம் இரட்டைகிளவி,
அழகு (அகத்தின்) அன்பு இரட்டைகிளவி,
அழகு (அகத்தின்) அருள் இரட்டைகிளவி,
அழகு புகழ் போதை தரக்கூடியன,
அழகு பற்று துயரை தரக்கூடியன,
அழகு துணிவு வெற்றியை தரக்கூடியன,
அழகு ஆற்றல் உயர்வை தரக்கூடியன்.
அகத்தின் அழகை நல்ல எண்ணங்களைக் கொண்டு மெருகேற்றுவீர்.
புறத்தின் அழகை நல்ல செயல்களை செய்து மேம்படுத்துவீர்.
அழகினால் தோன்றும் போதையை வெற்றி கொள்வீர்,
அழகைக்கொண்டு துணிவும் மற்றும் ஆற்றலில் உதவியோடு வாழ்வில் உயர்வீர்.
Powered by ScribeFire.

இச்சையின்றி இம்மியும் நகராது,
பிச்சையின்றி கலையும் சேராது,
காயமின்றி எண்ணங்கள் வாராது,
சாயமின்றி வண்ணங்கள் சேராது,
ஸ்தூலமின்றி இவ்வுலகம் இராது,
ஞாலமின்றி அவ்வுலகம் இராது.
பிண்டமின்றி ஜீவன்கள் கிடையாது,
அண்டமின்றி சிவனே கிடையாது,
ஒலியின்றி கேள்வி கிடையாது,
வலியின்றி வேள்வி கிடையாது,
கருவியின்றி கர்மம் கிடையாது,
அருவியின்றி தர்மம் கிடையாது.
ஏணியின்றி உயர்வு இல்லை,
கேணியின்றி பகிர்வு இல்லை,
கோபமின்றி சாபம் இல்லை,
லோபமின்றி லாபம் இல்லை,
காமமின்றி காதல் இல்லை,
சாமமின்றி பாடல் இல்லை.
இவ்வுலக வாழ்வில், எல்லாவுமே ஒன்றோடு ஒன்று சார்ந்தே இருக்கக்கடவது.
இதை புரிந்து அனுசரித்து நடக்க, வாழ்க்கையில் இன்பம் மட்டுமே மிஞ்சும்.
Powered by ScribeFire.


தனிமையே திவ்ய தவமென
திறிந்து கொண்டிருந்தேன் நேற்று
இனிமையே நாம் கொண்ட நட்பென
Instantட்டாய் புரியவைத்தாய் இன்று
நாளை என்ற கேள்வியே நமக்கு
Nonsensical தனமாக இருக்கு
இப்போது என் செய்வோம் எனக்கண்டு
வெல்ல வேண்டும் திறம்பட புரிதல் கொண்டு
பலமாக பாலமாக இருப்பது நம் நட்பு
நண்பர்கள் அன்றி இருத்தல் மிக தப்பு
எனக்கு நண்பனாக நீயும்
உனக்கு தோழனாக நானும்
சேர்ந்தே சாதிப்போம் ஒன்றுபட்டு
நம் நட்புக்கு இருக்குமொரு கல்வெட்டு.

மரணம் ஆனந்தம்;
மரணம் ஸ்தூல உடலுக்குத்தான்,
மரணம் ஆன்மாவிற்கில்லை
நான் ஆன்மா;
நான் அருவம்;
நானே எங்கும் நிறைந்திருக்கிறேன்;
நானே எல்லாவும்;
எல்லாவும் நானே!
எனக்கு ஒரு தோழியுண்டு,
அவளுக்கு என் மீது மிகுந்த அன்புண்டு;
அவளை எனக்கு மிகப்பிடிக்கும்,
அவளுக்கும் என்னை மிகப்பிடிக்கும்;
என் சொல்லை அவள் தட்டமாட்டாள்,
அவளுக்காக நான் எதுவும் செய்வேன்;
குறுதிப்பற்றல்ல,
ஸ்தூலபற்றுமல்ல,
உயிர்பற்றுமல்ல,
ஏதோ ஒரு ஏக யுணர்வு;
அவளை பார்க்க தேவையில்லை,
அவளுடன் பேசத்தேவையில்லை,
அவளருகிலும் வேண்டியதில்லை,
ஆனாலும் அவளை யுணர முடிகிறது;
என் எண்ணங்கள்,
அவளை காத்து நிற்கும்,
அவளை வழி நடத்தும்,
அவளுக்கு பூரணத்துவ மளிக்கும்,
அவளை ஞானியாக்கும்;
அவள் என்னுடைய தோழி,
என்னுடைய ஒரே அன்புத்தோழி!