Archive

Posts Tagged ‘tamil’

கனவுகள் மெய்ப்பட வேண்டும்

January 11th, 2016 No comments

காணும் கனவுகள், காட்சிகள் மட்டுமன்று
வருங்காலத்தின் வெள்ளோட்டமே அவையாவும்;

காட்சிகளின் கருத்தை ஆழப்புரிந்து
கருத்தை கர்மமாகக் கொண்டு, யோகமாய்;
கருமத்தை கர்த்தா விலக்கி கடமையாய்,
கர்த்தாவே கருமத்தை கருத்தாய் கதிமுடிக்க,

கண் திறந்து கண்ட கனவுகள் கரையேருவது
மெய்யன்றி வேறில்லை,
மெய்யுணர் மதியோனே!!

Tags: , ,

போதையானர் (Vs Pythagoras)

September 7th, 2015 No comments

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே

Premise: Consider the Running length of the base of a right-angle triangle as “a” and the standing height “b” and hypotenuse is “c”. As per Pythagoras theorem we have c2 = a2 + b2[Update] Ensure that the triangle is rotated to have the base side longer than the height side.

Proof:  As per the poem we have to consider (7/8) of the base length, that is  (7a/8) and half of the height, which is (b/2) and sum them up to get the hypotenuse “c”

We have (7/8)a + (1/2)b = c => 7a + 4b = 8c.

Consider an easy example of 3, 4 and 5.  By Bodhaiyanar, we get 7*4+4*3 = 40 = 8*5 => c = 5.  We were able to find the hypotenuse without using square root operator in constant time.

Caveat: This algorithm works only for whole number hypotenuse values.  For others, it gives a quick and approximate estimate.

ஆசிரியர் தின வாழ்த்து

September 5th, 2015 No comments

தெய்வத்தை தொழுவதும்,
தெய்வீகத்தில் நிலைப்பதும்,
அத்தெய்வமாகவே உருபெருவதும்,
உய்வதின் நோக்கமாகக் கொண்டவர் யாவரும்;
அத்தெய்வீகத்தை அறிவிப்பவர் குருவே என்பதை ஆழ்ந்துணர்ந்திருப்பர்.

தெய்வீகம் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம்,
சிலருக்கு தெய்வத்தை ஆராதிப்பதிலும்,
சிலருக்கு செய்யபடுதொழிலிலும் ஆராய்ச்சியிலும்!

எதுவாக இருப்பினும்,
அதன் ஆழ்பொருளை உணரவைப்பவரே குருவாவார்.

குருவின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குவோர் பலர் மத்தியில்,
எங்கள் அனைவருக்கும் தாங்கள் அருள்பாலித்திருப்பது,
எப்பிறவியில் யாமியற்றிய புண்ணியமோ!

இந்த ஆசிரியர் திருநாளில்
பெருந்தகையாக எழும்பி
எம்மை ஆட்கொள்ளுமாரே..

Approximate English Translation

to worship the almighty,
to be engulfed in spirituality,
to become the supreme soul,
for all who have these as destiny,
possess deeper realization that
only “guru” could show the path.

spirituality differs for individuals,
for some it’s in worshiping,
for some it’s in work and research.

whatever be the genre
the one who announces the path
remain the “guru”.

whilst several yearning for the glimpse of the guru,
what goodness we’d done in our past lives,
to be basking in your blessings, showering upon us.

in this teacher’s day eve,
raise high like a tide,
and fill us with wisdom.

கிருஷ்ணா…

February 15th, 2015 No comments

நா-னென்ற இவ் வாணவமே வேண்டாம்.
ஓ… ஊணு-யிர் என உலறல் வேண்டாம்.
நா..ன்.. வீழ்ந்து எழுகவே.. வேள்வி(யும்) வேண்டாம்.
கேள்விகள் எதுவும் கேட்க-வில்லை;
கேட்டேன் கழல்கள் கையருகே..

அறியாமல் செய்த தவறால்,
அகங்காரம் கொண்டு பிறந்தேன்.
அகம்பாவ மென்ற பிணியால்,
அவமான மென்று குணிந்தேன்.

எண்ணங்கள் நிறைந்திருந்தால்,
பிண்ணங்கள் நீங்கிடுமே..
பிண்ணங்கள் நீங்கிட-வே..
எண்ணங்கள் நிறையணுமே..

அறியாமல் செய்த தவறால்,
அகங்காரம் கொண்டு பிறந்தேன்.
அகம்பாவ மென்ற பிணியால்,
அவமான மென்று குணிந்தேன்.

உன் பாதங்கள் போற்றிடவே, படிதாண்டி வந்தேனே..
பாதங்கள் காணலியே, விழிமூடி நின்றேனே..

மனநாசம் மெய்யென்று உன்வாசம் அறிவேனே..
பலவேசம் கொண்டாலும் உன்பாதம் பிறியேனே..

என்னோடு நீ இருந்தால்!

காணும் காட்சிகள் மெய்யென்றால், கண்டவன் யானும் மெய்யன்றோ,
கனவினில் காட்சிகள் பொய்யென்றால், கண்டவன் கண்டதும் பொய்யன்றோ!!
கனவே வாழ்வின் பொருளாக, வாழ்ந்தவ ருணரரும் காலம்வரும்,
காலம் கனிந்து கூடிடவே, வாழ்ந்ததின் வாய்மை விளங்கிவிடும்..

நட்பு

December 11th, 2014 No comments

நற்றுணையாயின் நன் நட்பு,
நோக்கம் நெறிபட நிமிர்ந்து நிற்குமாமே!
நீறூற்றாயின் நின் அன்பு,
லோகம் பொடிபட விரைந்து வெல்லுமாமே!

அன்பு

December 11th, 2014 No comments

பிந்தியாவின் தமிழ் வீட்டுபாடத்திற்காக எழுதியது:

தாயின் அன்பு பாசமானது,
தந்தையின் அன்பு அறிவானது,
குருவின் அன்பு கல்வியானது,
தெய்வத்தின் அன்பு வாழ்வானது,
அன்பு நிறைந்த மனிதம் இறைவனாவது திண்ணமே!!

சுயநலவாதம்

September 13th, 2013 No comments

வான் துறந்து வலி துறந்த மனமோ,
ஊண் துறந்து உயிர் துறந்த இருப்போ;
கோண் துறந்து கொடை துறந்த உலகோ,
கோல் துறந்து கொள்கை துறந்த இருப்போ;
இவ்விரு இருப்புமே சுயநலவாதந்தானே!

 
முதலிரண்டு அடிகளில், உள்நோக்கிய பயணத்தினால் ஏற்படக்கூடிய சுயநலத்தை அறியமுடியும். இப்பயணத்தில் தன்னை அறிய முற்படும்போது ஒருமை மட்டுமே தெரியும். “நான்” என்ற எண்ணம் மட்டுமே தெரியும். மேற்கொண்டு பயணப்படும்போது, “நான்” என்ற எண்ணமும் மறையும். அப்போது ஒருமையும் கூட இருக்காது. பயணப்படுபவர் மற்றவர் பார்வையில் சுயநலவாதியாகவே தெரிவார், ஏனெனில் உணர்ச்சியற்ற சமாதி நிலையில் இருப்பவரிடம் அன்பு மட்டுமே கிட்டும்; பாசமோ, பற்றோ, ஆசையோ, அச்சமோ, கோபமோ, வெட்கமோ, பயமோ, ஏதும் இருக்காது!
 
அடுத்த இரண்டடிகளில், உலக வாழ்வில் ஏற்படும் சுயநலத்தை பற்றி அறியமுடியும். இங்கும் “நான்” என்ற எண்ணம் மேலோங்கி இருப்பது திண்ணம். அதில் சிறப்பு என்னவென்றால், “நான் மட்டுமே” என்ற எண்ணம் இருப்பதே அனைத்து துயருக்கும் அடிகாலாக அமைகிறது.
 
இரண்டுமே சுயநலவாதம் தான், ஆனால் வெவ்வேறு விதம். முதலில் உணரப்படுவது பிறநிலையால், இரண்டாவதில் உணரப்படுவது தன்நிலையால்.

ஒரு புலம்பல்!

September 13th, 2013 2 comments

தேடிய திரவியம் பக்கத்திலே
ஆடுது பாருங்க விட்டத்திலே
மூடிய வெண்பனி மொத்தத்திலே
வாடுது கண்மணி நட்டத்திலே.

வருவதும் வந்ததும் என்னது இல்லே
போவதும் போனதும் யாருதும் இல்லே
இருப்பதும் இருந்ததும் அறியரது இல்லே
வருவதும் போவதும் புரியரது இல்லே

பாடல்கள் கேட்கும்போது காதலுணர்வு வருமா?

April 16th, 2013 No comments
புறத்தே புலனால் அரும்பும் காமம்;
அகத்தே ஆழத்தே ஊறும் அன்பு;
காமத்தோடு இசைந்த அன்பு காதலாகிவிட,
செவியோடு கசியும் இனிய பாடல் ஒன்று
அக்காதலை தூண்டுவது நியாயம்தானே!
Tags: , , , ,

கனா கண்டேன்..

June 22nd, 2012 No comments

மதியினில் மாயமென மனதினில் மோகமென
மதியாய் முன்னிறங்கி மோன முடைபட
மத்தியில் மூச்சுமின்றி மத்தாய் முறுங்கிட
முக்தியில் நின்பிறைதனில் மறை கண்டேனே!

Tags: , , , ,