Archive

Posts Tagged ‘song’

யுவன் சங்கர் ராஜாவின் யுக்தி

May 4th, 2011 No comments
வித்தியாசமான ஒலிகளை எழுப்பும் கருவிகளை தத்தம் இசையமைத்த பாடல்களில் உபயோகிப்பதில் யுவன் மிகவும் கைதேர்ந்திருக்கிறார். எப்போது கேட்ட ஒலிகளை தாண்டி, தனித்த ஒலிகளை கேட்கும்போது வரும் கிறக்கமே தனிதான்.  ஹாரீஸ் ஜெயராஜ் கூட இதே யுக்தியை பயன்படுத்துகிறார்.

ஆண்டு படம் பாடல் இசை
2011 மங்காத்தா விளையாடு மங்காத்தா.. யுவன்
2011 பேசு வெண்ணிற இரவுகள், I have a dream.. யுவன்
2011 கோ அக நக ஹாரீஸ்
2010 நான் மகான் அல்ல கண்ணோரம் காதல் வந்தால்.. யுவன்

நேனு நூவண்ட்டு வேரய் புனா… (படம்: அரஞ்ச், தெலுங்கு, 2010)

January 11th, 2011 No comments

இந்த பாடலில் மெட்டு எனக்கு மிகவும் பிடித்தது, ஹாரிஸ் ஜெயராஜ் என்றால் சொல்லத்தான் வேண்டுமோ? கீழே என்னுடைய பாடல் வரிகளை தொகுத்துள்ளேன். அசல் பாடலின் அர்த்தம் எனக்கு தெரியாது, எனக்குத் தோன்றிய கருத்தை மெட்டில் அமர்த்தியிருக்கிறேன்.

(பல்லவி)
சாலை எங் கெங்கும்
உன்னை தேடும்
என்
விழியில்
தூறல் துளிகள் உருகுதே,
உனை
நாடித் தழுவ தவிக்குதே,
மனம்
கொள்ளை கொண்ட என் கள்வனே…

மோகம் கசிந் துருகும்
மாலை நேரம்,
உன்
நிழலின்
பிம்பம் பற்றி நின்றேனே,
உனை
சொந்தம் என்று கொண்டனே,
வரம்(ந்)
தன்னை தந்த என் மன்னனே…

உந்தன் பார்வையாலே இங்கு பெண்ணாகி,
உந்தன் வார்த்தை கேட்டு உளம் ஒன்றாகி;
எந்நெஞ்சுக் கூட்டில் உன்னை வைத்தேனே..

என் பார்வை என்றுமே உனைத்தேட,
உன் பார்வை பார்த்தும் ஒளிந்தோட,
என் கண்ணக்குழியில் உன்னை விதைத்தேனே..

சாலை எங் கெங்கும்
உன்னை தேடும்
என்
விழியில்
தூறல் துளிகள் உருகுதே,
உனை
நாடித் தழுவ தவிக்குதே,
மனம்
கொள்ளை கொண்ட என் கள்வனே…

(சரணம் 1)
துணை வரும் உந்தன் கரம்
நிந்தோளில் சாயும் எந்தன் சிரம்
பாதை தோறும் உன்னால் என்றும் பூங்கா வனம்..

தேங்கும் எந்தன் அன்பின் வளம்
சேரும் இடம் உந்தன் அகம்
நம் மனம் சேரும் வாழ்வில் என்றும் சுகம் தினம்..

என் கனவில் வருவது எல்லாம்
உன் முகம்தான்
வேறில்லை
கண் விழித்து பார்ப்பதும் உன்னை
உன் அன்பின் அணைப்பில் இன்னல் மறப்பேனே..

(பல்லவி)
மோகம் கசிந் துருகும்
மாலை நேரம்,
உன்
நிழலின்
பிம்பம் பற்றி நின்றேனே,
உனை
சொந்தம் என்று கொண்டனே,
வரம்(ந்)
தன்னை தந்த என் மன்னனே…

(சரணம் 2)
துணை வரும் உந்தன் கரம் (to be replaced)
நிந்தோளில் சாயும் எந்தன் சிரம்
பாதை தோறும் உன்னால் என்றும் பூங்கா வனம்..

தேங்கும் எந்தன் அன்பின் வளம் (to be replaced)
சேரும் இடம் உந்தன் அகம்
நம் மனம் சேரும் வாழ்வில் என்றும் சுகம் தினம்..

கண் மணியில் இருப்பதும் நீதான்
என் தலைவா
பொய்யில்லை
நான் போகும் திசையெல்லாம் நீதான்
என் பாதை என்றும் உன்னை சார்ந்தேதான்..

(பல்லவி)
சாலை எங் கெங்கும்
உன்னை தேடும்
என்
விழியில்
தூறல் துளிகள் உருகுதே,
உனை
நாடித் தழுவ தவிக்குதே,
மனம்
கொள்ளை கொண்ட என் கள்வனே…

மோகம் கசிந் துருகும்
மாலை நேரம்,
உன்
நிழலின்
பிம்பம் பற்றி நின்றேனே,
உனை
சொந்தம் என்று கொண்டனே,
வரம்(ந்)
தன்னை தந்த என் மன்னனே…

உந்தன் பார்வையாலே இங்கு பெண்ணாகி,
உந்தன் வார்த்தை கேட்டு உளம் ஒன்றாகி;
எந்நெஞ்சுக் கூட்டில் உன்னை வைத்தேனே..

என் பார்வை என்றுமே உனைத்தேட,
உன் பார்வை பார்த்தும் ஒளிந்தோட,
என் கண்ணக்குழியில் உன்னை விதைத்தேனே..

(standby)
தினம் உன்னை காணவே துடிப்பேனே
உந்தன் உள்ளங் கையினுள் புதைவேனே
மானம் காக்கும் வீரம் உனதாமோ?

Powered by ScribeFire.

Tags: , , , ,

அழகன்: சங்கீத ஸ்வரங்கள்..

January 10th, 2011 No comments

“அழகன்” படத்தில் வரும் “சங்கீத ஸ்வரங்கள்” அதனுடைய திரைக்கதை, படம் எடுத்த விதம், பாடல்வரிகள், இசை, திரை அமைப்பு மற்றும் தொலைக்காட்சி, சாலைகள், வெளிச்சம் போன்ற மெல்லிய நுணுக்கங்களுக்காக மிகவும் பிரபலமானது.

ஆனால் ஒரு அடிப்படை தவறு இருப்பதை இன்றுதான் உணர்ந்தேன். பாலசந்தர் படங்களில் தர்க்கம் தெளிவாக இருக்கும். இருந்தாலும் இரவு 9 மணியில் இருந்து பகல் 7 மணிவரை battery charge போடாமல் பேசக்கூடிய wireless handset அந்த படத்தின் காலத்தில் இருந்ததாக தெரிவில்லை!

காதல்

March 6th, 2010 No comments

கீழ் கண்ட இப்பாடலை “கோவா” படத்தில் வரும் “இது வரை” என்ற பாடலின் மெட்டில் பாடி பார்க்கவும்.

இருவிழி கொண்டாடும் கனவிது;
இதயத்தில் நின்றாடும் இசையிது;
கருத்தினில் கண்மூடி கரைந்திட காத்து கிடந்தேனே.. (2)

தூங்காமல் தூங்கி சரிந்தது,
பார்க்காமல் பார்க்க துடித்தது,
பேசாமல் பேசி ரசித்தது,
அன்றே ??
தீண்டாமல் தீண்டி தவித்தது,
தாண்டாமல் தாண்டி சிரித்தது,
வேண்டாமல் வேண்டி கொடுத்தது,
இன்றே ??

உள்ளத்துள்ளே உன்னைத்தேடி அலைய,
உன்னைக்கண்டு உலகத்தை மறக்க,
உயிரிலும் உணர்விலும் கலந் திருந்தாயே..
எண்ணத்துள்ளே என்னையறியாமல் தாண்டவமாடி களித்தாய்,
என்னை தூங்கவிடாமல் துளிர்த்தாய்,
இதுசுகமென வேண்டி என்னைத்தேடி தொலைந்தேனே..

எண்ணங்களின் எல்லையிலே இருந்தேன்,
எல்லைதாண்டும் உந்தன் உணர்வறிந்தேன்,
எனைத்தேடும் உந்தன்பார்வை ஆட் கொள்ளுதே..
என்னையீர்க்கும் உன்னுடைய அன்பு என்னைமீறி செல்லும்,
அது என்னை உன்னடி சேர்க்கும்,
இதுசுகமென வேண்டி என்னைத்தந்து களித்தேனே..

சிறகெனும் சிற்றாடை சுகமிது;
பிறவியின் பற்றான துதியிது;
உறவினில் உன்னோடு உறைந்திட ஏங்கி தரித்தேனே.. (2)

பாவை நான்-உன்னகம் விழுந்தேன்,
பார்வை-அதை உன்னிடம் தொலைத்தேன்,
பூவை-நான் எனமனம் துறந்தேன்,
இன்றே! .. (2)

Powered by ScribeFire.