Archive

Posts Tagged ‘siledai’

வர்ணனை

October 28th, 2009 No comments

நிறம் பல கொண்டாய்,
புறம் இழைய பொதிந்தாய்,
நிலம் பார்த் தசைந்தாய்,
புலம் போற்றி யீர்த்தாய்.

திரை சீலை கொண்டாய்,
பட்டுடுத்தி நின்றாய்,
திரை விலகி திமிர,
பட்டாக படர்ந்தாய்.

உள்ளங் கையில் தவழ்ந்தாய்,
உள்ளவன் கையில் தவித்தாய்,
உள்ளந் நெகிழ தளர்ந்தாய்,
உள்ளவன் மகிழ மலர்ந்தாய்.

உச்சம் முரச நிமிர்ந்தாய்,
மிச்சம் முதலாய் சிலிர்த்தாய்,
முத்து உருண்டோட மிளிர்ந்தாய்,
சித்து சுதியேர மசிந்தாய்.

உருவம் ஒன்றன்றி இருப்பாய்,
இலவம் பஞ்சினும் சிறப்பாய்,
உலகும் வியந்தபடி பிறப்பாய்,
இலகும் மதுரமேனி விருப்பாய்.

Powered by ScribeFire.

Tags: , ,