Archive

Posts Tagged ‘saivam’

தொண்டைநாடு நிறைவுற்றது..

February 21st, 2011 No comments

தொண்டை நாட்டின் அனைத்து (31) தேவாரப் பாடல் பெற்ற ஆலயங்களையும் தரிசனஞ்செய்து பெரும்பேறு பெற்றேன். www.shivatemples.com மற்றும் www.shaivam.org க்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்
1. ஏகாம்பரேஸ்வரர் கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்)
2. திருமேற்றளிநாதர் திருக்கச்சி மேற்றளி
3. ஓணகாந்தேஸ்வரர் திருஓணகாந்தான்தளி
4. அநேகதங்கா பதேஸ்வரர் கச்சி அநேகதங்காபதம்
5. காரை திருநாதேஸ்வரர் கச்சிநெறிக் காரைக்காடு
6. வாலீஸ்வரர் திருகுரங்கணில் முட்டம்
7. அடைக்கலம்காத்த நாதர் திருமாகறல்
8. வேதபுரீஸ்வரர் திருவோத்தூர்
9. பனங்காட்டீஸ்வரர் திருப்பனங்காட்டூர்
10. வில்வநாதேஸ்வரர் திருவல்லம்
11. மணிகண்டேஸ்வரர் திருமாற்பேறு
12. ஜலநாதேஸ்வரர் திருஊறல் (தக்கோலம்)
13. தெய்வநாதேஸ்வரர் இலம்பையங்கோட்டூர்
14. திரிபுரநாதர் திருவிற்கோலம்
15. வடாரண்யேஸ்வரர் திருவாலங்காடு
16. வாசீஸ்வரர் திருப்பாசூர்
17. ஊண்றீஸ்வரர் திருவெண்பாக்கம்
18. சிவானந்தேஸ்வரர் திருக்கள்ளில்
19. ஆதிபுரீசர், படம்பக்கநாதர் திருவொற்றியூர் (சென்னை)
20. வலிதாய நாதர் திருவலிதாயம்
21. மாசிலாமனி ஈஸ்வரர் திருமுல்லைவாயில்
22. வேதபுரீசர் திருவேற்காடு
23. கபாலீஸ்வரர் திருமயிலை (சென்னை)
24. மருந்தீஸ்வரர் திருவான்மியூர் (சென்னை)
25. விருந்திட்ட ஈஸ்வரர் திருக்கச்சூர் ஆலக்கோவில்
26. ஞானபுரீஸ்வரர் திருஇடைச்சுரம்
27. வேதகிரீஸ்வரர் திருக்கழுகுன்றம்
28. ஆட்சீஸ்வரர் அச்சிறுபாக்கம்
29. சந்திரசேகர் திருவக்கரை
30. அரசிலிநாதர் திருஅரசிலி
31. மாகாளேஸ்வரர் இரும்பை மாகாளம்

பனங்காட்டு ஈஸ்வரர் கோவில், திருவன்பார்த்தான் பனங்காட்டுர்

May 17th, 2009 No comments



காஞ்சிபுரத்திலுருந்து சுமார் 7 கிமி வந்தவாசி சாலையிலில் செல்ல, ஐயன்குளம் கூட்டுசாலை வரும்.  அதில் வலப்புறம் திரும்பி சுமார் 7 கிமி நேராக செல்ல, திருப்பனங்காட்டூர் குருக்கு சாலை சந்திப்பு வரும். அதில் வலப்புறம் திரும்பி சுமார் 2 கிமி சென்றால் திருப்பனங்காடு கிராமம் வரும், சற்றே கடந்துச்செல்ல ஆலயம் வரும்.  இவ்வாலயத்தில் இரண்டு மூலவர் லிங்கம் உண்டு ஒன்று அகத்திய முன் ஸ்தாபித்தது, மற்றொன்று அகத்தியரின் சீடர் புலத்தியர் ஸ்தாபித்த்து.  வரலாறு அறிய http://www.shivatemples.com/tnaadut/tnt09.html சுட்டவும்.

இந்த ஆலயத்தில் ஒரு விந்தையுள்ளது.  வெளி அடுக்கிலுள்ள ஒரு தூணில் ராமன் அம்பு எய்ய ஆயத்திருப்பதுபோல் ஒரு சிற்பம் உள்ளது.  உள்ளிலுள்ள அடுக்கிலுள்ள ஒரு தூணின் வாலி-சுக்ரீவன் சண்டையிடுவதுபோல் ஒரு சிற்பம் உள்ளது.  ராமனிடமிருந்து பார்த்தால், வாலி-சுக்ரீவன் தெளிவாகத்தெரியும்.  வாலி-சுக்ரீவன் இடத்திலிருந்து பார்த்தால் ராமன் மொத்தமாகத் தெரியவில்லை.  என்ன அருமையாக கட்டிடகலையில் அசத்தியிருக்கிறார்கள்!!

வாலீஸ்வரர் கோவில், திருகுரங்கணில் முட்டம்

May 17th, 2009 No comments

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் சுமார் 9 கிமி தொலைவில் இருக்கும் தூசி கிராமத்தில் பிரிந்து சுமார் 2 கிமி கடந்து செல்ல திருகுரங்கணில் முட்டம் கிராமம் வருகிறது.  இந்த கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது.  இங்கு குரங்காக மாறிய வாலிக்கும், அணிலாக மாறிய இந்திரனுக்கும், காகமாக மாறிய எமனுக்கும் ஈசன் சாபவிமோசம் அளித்துள்ளார் என்பது ஐதீகம்.  கோயிலின் வாயிலில் குரங்கு, அணில், காகம் இறைவனை பூசிப்பதை காணலாம்.  http://www.shivatemples.com/tnaadut/tnt06.html

காஞ்சிபுரத்திலிருந்து Collector அலுவலகம் வழியே செல்லவேண்டும்.  வந்தவாசி சாலை குறுகியது.  சுமார் 4 கிமி சென்ற பிறகு பாலாற்றின் மீதமைந்துள்ள பாலத்தை கடக்கவேண்டும்.  சிறிது தூரம் சென்றபின் ஐயன்குளம் கூட்டுசாலை வரும்.  அதைகடந்து செல்ல தூசி கிராமம் வரும்.  ஆங்கு இடதுபுரம் திரும்பி சுமார் 1 கிமி செல்ல தூசி கிராமம் எல்லை வரும்.  அதிலிருந்து சுமார் 1.5 கிமி கடக்க குரங்கணில் முட்டம் வரும்.

ஆலயத்தின் குருக்கள்,  திரு KM Sridhar (9600787419, 9629050143, 044-27242409) மிக அருகே இருக்கிறார்.