ஒரு சந்தேகம்!
சிறையிலிட்ட சிலைகளிடம்
சில்லரையிட்டு;
சிக்கல்களுக்கு
சீக்கிரமாகவும், சிக்கனமாகவும், சிரமமில்லாமலும்
சிந்தையாலேயே சரிகட்ட
சிரம் தாழ்த்தி
சங்கல்பம்கொள்ளும் சிறியோர்க்கு
சிவனே சித்தமேற்றாலும்
சீக்கருக்கத்தான் முடியுமோ!

சிறையிலிட்ட சிலைகளிடம்
சில்லரையிட்டு;
சிக்கல்களுக்கு
சீக்கிரமாகவும், சிக்கனமாகவும், சிரமமில்லாமலும்
சிந்தையாலேயே சரிகட்ட
சிரம் தாழ்த்தி
சங்கல்பம்கொள்ளும் சிறியோர்க்கு
சிவனே சித்தமேற்றாலும்
சீக்கருக்கத்தான் முடியுமோ!

அசைவம் தவிர்த்தல்,
வாக்கு தவிர்த்தல்,
அச்சம் நீக்கல்,
அவசரம் நீக்கல்,
பந்தம் அறுத்தல்,
எதிர்பார்ப்பு அறுத்தல்,
பற்று அகற்றல்,
குரோதம் அகற்றல்,
ஈர்ப்பு விலக்கல்,
உணர்ச்சி விலக்கல்,
சுவை குறைத்தல்,
பாரம் குறைத்தல்,
நிதானம் கொளல்,
எளிமை கொளல்,இவையாவும் எனக்கருள் நீ பராபரமே..




இந்த கோயிலுக்கு செல்ல, திருவள்ளூர் தாண்டி திருப்பாச்சூரில் இடப்பக்கம் திரும்பி சுமார் 14 கிமி செல்ல கடம்பத்தூர் தாண்டி பேரம்பாக்கம் வரும். பேரம்பாக்கத்திலிருந்து சுமார் 3 கிமி தொலைவில் கூவம் கிராமம் வரும். பேரம்பாக்கத்திலுருந்து கூவம் கிராமம் செல்லும் வழியில் கூவம் நதியை புண்ணிய நதியாக காணலாம் (மழை காலங்களில் மட்டும் தான் நீரோட்டம் இருக்கும்).
சிவாய வசி எண்ணவும் செபிக்க, இச்சகம் எலாம்;
சிவாய வசி எண்ணவும் செபிக்க, யாவும் சித்தியாம்;
சிவாய வசி எண்ணவும் செபிக்க, வானம் ஆளளாம்;
சிவாய வசி என்பதே, இருதலை தீ யாகுமே!

Powered by ScribeFire.
மனம், வாக்கு, காயம்;
சிந்தினை, சொல், செயல்;
நான், எனது;
இவையனைத்தும் உன் திருப்பாதங்களில் சமர்பணம்.

Powered by ScribeFire.