Archive

Posts Tagged ‘poems’

பெரிதழல் மனமே..

May 7th, 2012 No comments

ஊற்றுநீர் பெருக்கி தாகம் தனித்த,
கீற்றுடை பெருமான் நீன் கமலம்,
போற்றிப் பெரிதுவக்கும் எண் பனித்த,
ஏற்றிக் பெரிதழல் ஆரும் மனமே..

பொருள்: ஞானத்தேடல் எனும் தாகத்தை தனிக்க ஊற்றுநீராக உள்ளத்தே ஒளியை பெருக்கிய கருணை கீற்றுடைய எம்மான் இறைவன், உன் பத்ம பாதத்தை எண்ணங்களை பனித்து எண்ணங்களால் எப்போது தொழுது பேரின்பம் கொள்ளுமே, இச்சையினால் மோகத்தீயை பெருக்கி அவ்விச்சையினாலே ஆரும் மாயமனம்.

காமம்

February 19th, 2012 No comments

காயத்தின்பாற் கொண்ட காமத்தினாலே,
மாயத்திரைமேவும் மனோ சாயம்,
மோனத்தில் மிஞ்சுமோ ஏகோச்சாரம்,
ஞானத்தின்பாற் கற்றுணரப் பணிந்தேனே.

சமன்பாடு (The Equation)

July 21st, 2011 No comments

ஒரு சமன்பாட்டின் இரு பக்கங்கள் (Two sides of an equation). Poem war transcript from Blackriverpoets.com.

காமமில்லா காதல் அன்பானது
நோக்கமில்லா நட்பு வரமானது
தேடலில்லா பிறவி கடனானது!

பொய்யில்லா பெண்மை அழகானது
எதிபார்ப்பில்லா உறவு இன்பமானது
நோக்கமில்லா வாழ்க்கை வீணானது !

உயிரில்லா மெய் பிண்டமானது
மெய்யில்லா சேர்க்கை சாபமானது
உழைப்பில்லா உயர்வு தானமானது!

ஆக்கமில்லா கனவு சோர்வானது
கனவில்லா உள்ளம் வஞ்சகமானது
உணர்வில்லா உயிர் இழிவானது !

கருத்தில்லா வாக்கு குப்பையானது
மருந்தல்லா உணவு பிணியானது
விருந்தில்லா விழா விரயமானது!

பொருளில்லா வாதம் வினையானது
குணமில்லா மருந்து மண்ணானது
பயனில்லா சிகிச்சை சிக்கலானது !

சீற்றமில்லா சிந்தை சுகமானது
ஏற்றமில்லா செயல்கள் கனிவானது
மாற்றமில்லா மனம் மகிமையானது

ஏமாற்றமில்லா எண்ணம் உயர்வானது
போரில்லா உலகம் அமைதியானது
ஆசையில்லா உள்ளம் தூய்மையானது !

கல்வியில்லா இளமை சோகமானது
கேள்வியில்லா வாழ்க்கை கேலியானது
தோல்வியில்லா வெற்றி துன்பமானது

வசவு

April 4th, 2010 No comments

தானுண்டு, தான் மட்டுமே உண்டு என நிலைகொண்டு ஆடும் மனமானது,
தன்னை தாண்டும் நிலைகண்டு தாளாமல் துடித்தெழுப்பும் ஓலமே வசவு;
ஆறக்கூடிய மனம் ஆரவாரமடையும் போது வசவு ஊறும், உருவெடுக்கும்,
ஊற்றெடுத்து உள்ளத்துள்ளே ஊடுருவி நாவின் நுனியின் ஜனிக்கும்,
தாளமில்லா தனித்துதியாகி காலமில்லா நானெனும் இருப்பைத் தூண்டும்,
ஆடிய ஆட்டம் அடங்கியபின் சுவடேதுமில்லாமல் மறைந்துபோகும், மறந்துபோகும்.
….

Powered by ScribeFire.

வர்ணனை

October 28th, 2009 No comments

நிறம் பல கொண்டாய்,
புறம் இழைய பொதிந்தாய்,
நிலம் பார்த் தசைந்தாய்,
புலம் போற்றி யீர்த்தாய்.

திரை சீலை கொண்டாய்,
பட்டுடுத்தி நின்றாய்,
திரை விலகி திமிர,
பட்டாக படர்ந்தாய்.

உள்ளங் கையில் தவழ்ந்தாய்,
உள்ளவன் கையில் தவித்தாய்,
உள்ளந் நெகிழ தளர்ந்தாய்,
உள்ளவன் மகிழ மலர்ந்தாய்.

உச்சம் முரச நிமிர்ந்தாய்,
மிச்சம் முதலாய் சிலிர்த்தாய்,
முத்து உருண்டோட மிளிர்ந்தாய்,
சித்து சுதியேர மசிந்தாய்.

உருவம் ஒன்றன்றி இருப்பாய்,
இலவம் பஞ்சினும் சிறப்பாய்,
உலகும் வியந்தபடி பிறப்பாய்,
இலகும் மதுரமேனி விருப்பாய்.

Powered by ScribeFire.

Tags: , ,

காதல் தோல்வியும் நன்மைக்கே

October 19th, 2009 No comments

எங்கோ பிறந்தேன்,
எப்படியோ வளர்ந்தேன்,
எதற்கு என்றறிவதற்கு முன்பே
காதல் கொண்டேன்,
பொய் பல பகர்ந்தேன்,
மெய் பல துலைத்தேன்,
நான் மட்டும் என்றேன்,
அவளும் அப்படியே என்றாள்,
காதல் கசந்தது,
தனித்தேன்,
துவண்டேன்,
நண்பர்களை அடையாளம் கண்டேன்,
என்னையும் அடையாளம் கண்டேன்,
பார்வையை சற்று திருப்பினேன்,
வாழ்வின் வெளிச்சம் புலப்பட்டது,
காலம் கைகொடுத்தது,
புத்துணர்ச்சி கொண்டேன்,
வெற்றி கண்டேன்.

Powered by ScribeFire.

ஒரு கோரிக்கை

October 19th, 2009 No comments

அசைவம் தவிர்த்தல்,
வாக்கு தவிர்த்தல்,
அச்சம் நீக்கல்,
அவசரம் நீக்கல்,
பந்தம் அறுத்தல்,
எதிர்பார்ப்பு அறுத்தல்,
பற்று அகற்றல்,
குரோதம் அகற்றல்,
ஈர்ப்பு விலக்கல்,
உணர்ச்சி விலக்கல்,
சுவை குறைத்தல்,
பாரம் குறைத்தல்,
நிதானம் கொளல்,
எளிமை கொளல்,

இவையாவும் எனக்கருள் நீ பராபரமே..

தும்மல்

September 25th, 2009 No comments

தும்மல் விலக்க,
நாசி துவாரத்தின் மத்தியில்,
நாசியின் நடுதண்டின் அடியில்,
ஆள்காட்டி விரலால் அழுத்த,
தும்மல் அடங்கும்.

Tags: , ,

ஆடவர்..

September 25th, 2009 No comments

ரோமம் நிறைந்தவன் உணர்ச்சிவயப்படுவான்,
ரோமம் அற்றவன் அதீத சுயநலவாதியாவான்,
வலது தோளில் மச்சமுள்ளவன் அதிட்டசாலி,
இடது தோளில் மச்சமுள்ளவன் போராளி,
லிங்கத்தில் மச்சமுள்ளவன் போகி,
கர்மத்தின் இச்சையுள்ளவன் யோகி,
பின்னலுள்ள உள்ளங்கையுடையான் குழப்பமடைவான்,
பின்னலில் உள்ளம் தொலைத்தவன் இன்னலடைவான்,
இல்வாழ்வு துறந்து ஞானத்தேடல் கடிது,
இல்வாழ்வு இருந்து ஞானத்தேடல் எளிது,
மனையாள் மனைவியாயிருத்தல் லவ்கீகம்,
மனையாள் துணைவியாயிருத்தல் ஆன்மீகம்,
தந்தையின் கர்மம் தமையனைச் சேரும்,
தமையன் முக்தம் வரை தந்தைக்கு முற்று அன்று,
சந்தானபேறு ஒரு கடமையே ஆகும்.

Tags: , ,

நம்பாதே..

September 25th, 2009 No comments

மார்பு மயிரற்ற ஆணையும்,
மார்பு சிறுத்த பெண்னையும்,
கண்மூடி நம்பாதே.

கழுத்து நீண்ட,
கண் சிவந்த,
சொல் திக்கிய,
உடல் குறுத்த,
உதடு தடித்த,
ஆட்டு தாடியுடைய,
ஆடவரை 
கண்மூடி நம்பாதே.