காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் சுமார் 9 கிமி தொலைவில் இருக்கும் தூசி கிராமத்தில் பிரிந்து சுமார் 2 கிமி கடந்து செல்ல திருகுரங்கணில் முட்டம் கிராமம் வருகிறது. இந்த கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது. இங்கு குரங்காக மாறிய வாலிக்கும், அணிலாக மாறிய இந்திரனுக்கும், காகமாக மாறிய எமனுக்கும் ஈசன் சாபவிமோசம் அளித்துள்ளார் என்பது ஐதீகம். கோயிலின் வாயிலில் குரங்கு, அணில், காகம் இறைவனை பூசிப்பதை காணலாம். http://www.shivatemples.com/tnaadut/tnt06.html
காஞ்சிபுரத்திலிருந்து Collector அலுவலகம் வழியே செல்லவேண்டும். வந்தவாசி சாலை குறுகியது. சுமார் 4 கிமி சென்ற பிறகு பாலாற்றின் மீதமைந்துள்ள பாலத்தை கடக்கவேண்டும். சிறிது தூரம் சென்றபின் ஐயன்குளம் கூட்டுசாலை வரும். அதைகடந்து செல்ல தூசி கிராமம் வரும். ஆங்கு இடதுபுரம் திரும்பி சுமார் 1 கிமி செல்ல தூசி கிராமம் எல்லை வரும். அதிலிருந்து சுமார் 1.5 கிமி கடக்க குரங்கணில் முட்டம் வரும்.
ஆலயத்தின் குருக்கள், திரு KM Sridhar (9600787419, 9629050143, 044-27242409) மிக அருகே இருக்கிறார்.
“சிவன் சொத்து குல நாசம்” என்று ஒரு பழமொழியுண்டு. இதற்கு கற்பிக்கப்படும் பொருள் என்னவென்றால், சிவாலயத்தின் சொத்துக்களின் மேல் ஆசைப்படுவது தண்டிக்கப்படும் குற்றம். என் தந்தையும், குருவும் எனக்கு கற்றுக்கொடுக்கும் போது, சிவாலயத்திலிருந்து விபூதி தவிர வேறெதுவும் கொண்டு செல்லக்கூடாது என்றனர்.
நன்று ஆராய்ந்து பார்த்தால், இந்த பழமொழியுன் பொருள் இன்னும் ஆழமானது என்பது புரியும். நான் கடைசியாக யாருக்கோ இதைபற்றி சொல்லும்போதுதான் எனக்கு இந்த ஆழ்கருத்து புலப்பட்டது.
அதாவது, சிவன் சொத்து என்பது ஆலயத்தை மட்டும் குறிக்காது. அது இவ்வுலகத்தையே குறிக்கும். இவ்வுலக வாசனைகளால், ஆனந்தம் எப்போது அகப்படாது என்பதே ஆழ்கருத்தாகும். உலக வாசனைகளை துறப்பது எளிதன்று, ஆனாலும் முடியாததும் அன்று. ஆசைகளை மறுக்கக்கூடாது, ஆசைகளை அவை உதிக்கும் இடத்திலேயே வேறருக்கவேண்டும். அதற்கு முதற்படி, “என்னிடம் எல்லாம் உள்ளது என்று நம்பத்தொடங்குங்கள்”. எல்லாமே, என்னிடம் இருக்கும்போது எனக்கு ஆசைகள் கிடையாதல்லவா? அடுத்தப்படியாக, “நானே எல்லாம், எல்லாவுமே நான் தான்” என்று உணருங்கள். அமைதி பிறக்கும், ஆனந்தம் நிலைக்கும்.
திருவிற்கோலம் (தற்போது கூவம்) கிராமத்திலுள்ள திரிபுராந்தக சுவாமி அல்லது தீண்டாத் திருமேனி நாதர் பெருமானை காண நேற்று எனது thunderbirdல் சென்றேன். http://www.shivatemples.com/tnaadut/tnt14.html

இந்த ஆலயத்தில் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்த ஆலயம், கூவம் நதியில் மூலத்தில் அமைந்துள்ளது. ஆலயத்தின் குளம் அக்னி தீர்த்தமாகும்; இதில் வித்தியாசம் என்னவென்றால், இந்த குளத்தில் ஒரு தவளை கூட கிடையாது. ஆலயத்தில் மூலவரான சிவலிங்கம் தீண்டப்படாதது; ஏனெனில் இது நிறம் மாறக்கூடியது. வெள்ளை நிறமாக மாறும் போது மழைவருமாம், மற்றும் நினைத்த காரியம் நிறைவேறுமாம். இவ்வாலயம் தெற்கு பார்த்த கோபுரத்தை கொண்டது. ராஜ கோபுரம் தற்போது கட்டப்பட்டது தான். ஆலயத்தை நிர்வகிப்பது திரு ராஜேந்தின் (9381846515).
இந்த கோயிலுக்கு செல்ல, திருவள்ளூர் தாண்டி திருப்பாச்சூரில் இடப்பக்கம் திரும்பி சுமார் 14 கிமி செல்ல கடம்பத்தூர் தாண்டி பேரம்பாக்கம் வரும். பேரம்பாக்கத்திலிருந்து சுமார் 3 கிமி தொலைவில் கூவம் கிராமம் வரும். பேரம்பாக்கத்திலுருந்து கூவம் கிராமம் செல்லும் வழியில் கூவம் நதியை புண்ணிய நதியாக காணலாம் (மழை காலங்களில் மட்டும் தான் நீரோட்டம் இருக்கும்).
சிவாய வசி எண்ணவும் செபிக்க, இச்சகம் எலாம்;
சிவாய வசி எண்ணவும் செபிக்க, யாவும் சித்தியாம்;
சிவாய வசி எண்ணவும் செபிக்க, வானம் ஆளளாம்;
சிவாய வசி என்பதே, இருதலை தீ யாகுமே!
Powered by ScribeFire.
உனக்கு தோள்கொடுக்க தோழன் இருக்கிறேன்,
எதற்கும் கலங்காதே,
யாருக்கும் மயங்காதே,
நீ சாதிக்கப்பிறந்தவன்,
தளராதே,
துவளாதே
சோர்வு நம் எதிரி,
விழித்தெழு,
வல்லமையோடிரு,
புன்னகை பூத்திரு,
காலத்திற்கு காத்திரு,
அகத்தே உறுதிபூண்டிரு,
அளவான அகந்தையோடிரு,
அளவற்ற அன்போடிரு,
உன்னால் ஏதும் முடியும்,
நீ வெல்வாய்;
Powered by ScribeFire.
மனம், வாக்கு, காயம்;
சிந்தினை, சொல், செயல்;
நான், எனது;
இவையனைத்தும் உன் திருப்பாதங்களில் சமர்பணம்.
Powered by ScribeFire.
பார்வை ஒன்றாகியிருந்தும் நல்லது-கெட்டது இரண்டாகின;
ஆதவன் ஒன்றாகியிருந்தும், பகல்-இரவு இரண்டாகின;
நான் என்ற இருப்பு ஒன்றாகியிருந்தும், ஊண் – உயிர் இரண்டாகின;
எண்ணங்கள் ஓரிடத்திலிருந்து உதித்தும், ஆனந்தம்-பயம் இரண்டாகின;
நாவொன்றாகவிருந்தும், இன்மை-வன்மை இரண்டாகின;
இறையவன் ஒருவனாகியிருந்தும், தாய்-தந்தை இரண்டாகின;
இவையனைத்தும் இரண்டாகிபோனதாலே,
நாம் ஒன்றாகியிருந்தும், நீ-நான் இரண்டாகிபோனோம்!
முயற்சி திருவினையாக்கும்;
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்;
எறும்பூற கல்லும் கறையும்;
நான் கூறுவேன்; என்னோடு சேர்ந்து உரக்கக் கூறுங்கள்…
1) என்னால் முடியாதது ஏதுமில்லை
2) எல்லைகள் ஏதும் எனக்கில்லை
3) என் முயற்சிகளுக்கு யாரும் தடைபோட முடியாது
4) என்னால் எதையும் வெல்ல முடியும்
5) நான் மிகவும் திறமைசாலி
6) எனக்கு உதவ பெற்றோரும், நண்பர்களும் இருக்கிறார்கள்
7) எனக்கு தன்னம்பிக்கை நிறைய இருக்கிறது
8 ) என்னால் எதையும் சாதிக்க முடியும்
9) நான் எப்போதுமே சோர்ந்து போகமாட்டேன்
10) என் இலக்கை அடையும்வரை ஓயமாட்டேன்
என்ன சிந்திக்கிறீர்கள் ?
உறுதியாக, இப்போது உங்களை வெல்ல யாருமில்லை.. வாழ்த்துக்கள்
Powered by ScribeFire.