Archive
Posts Tagged ‘matrimony’
February 13th, 2009
1 comment
நம்ப முடியாத விளம்பரங்கள்…
January 31st, 2009
No comments

இந்த விளம்பரம், நான் என்னுடைய Yahoo! Mailன் பக்கவாட்டில் காண்பிக்கப்பட்டது. இதில் இரண்டு தவறுகள் உள்ளன.
- ஒன்று, திருமணமான பயனாளரான எனக்கு, இந்த விளம்பரம் ஏற்றதல்ல.
- இரண்டு, இந்த விளம்பரத்தில் துளிகூட உண்மையில்லை.
இதில் காண்பிக்கப்படுகின்ற பெண்கள், பொதுவாக மாடல்கள் (Professional Models).
இவர்கள், உண்மையாகவே திருமணத்திற்கு தயாரான, இணைய தளத்தில் பதிந்த பயனர்களில்லை.
இதை எப்படி சொல்லுகிறேனென்றால்,
- அதே படமானது பல மாதங்களாக வருகின்றது.
- அழகான இவர்கள், இத்தனை மாதங்களாக சரியான துணை கிடைக்காமல் இருக்கிறார்கள் என்றால், நம்பக்கூடியாத இல்லை.
இதில் இன்னுமொரு தவறு இருக்கிறது. இந்த பெண்களின் தொழில், மற்றும் வயதை பாருங்கள்.
- 21 வயதில் வங்கி மேலாளர் ஆவதற்கு சொந்தமாக வங்கி/கந்து வட்டிக்கடை தொடங்கினால் கூட முடியுமா என்று தெரியவில்லை.
- 22 வயதில் மனிதவள மேலாளர் ஆவதற்கு வாய்ப்பு சொந்தமாக (அப்பன் மூலமாக) தொழில் தொடங்கினால் மட்டுமே முடியும்.
கேக்கிறவன் கேனையா இருந்தா, “எறும மாடு ஏறோப்லேன் ஓட்டுச்சாம்”..
இப்படித்தான், நம்ப பசங்களை Naukri/Jeevansathi போல பெரிய நிறுவனங்கள் ஏமாற்றுகிறார்கள்.
Powered by ScribeFire.


