பாட்டு பாடுதலும் ஒரு யோகமே..
வாழ்தலில் அடிப்படை மூச்சு. மூச்சு சுத்தியாக இருப்பின், உடல் நலமாக இருக்கக்கடவது. உடல் நலமாக இருப்பின், எண்ணங்களும் அதை சார்ந்த செயல்களும் நன்மை பயக்கும்; வாழ்தல் வளமாக இருக்கும். இது ஒரு பீடிகை மட்டுமே!
மூச்சு பயிற்சி யோக பயிற்சியின் ஆதாரம். ஆனால் மூச்சு பயிற்சி செய்ய, சற்று ஆர்வமும், நேரம் ஒதுக்குதலும், உந்துதலும் தேவைப்படுகிறது. ஆனால், மூச்சு பயிற்சியை விளையாட்டாக செய்ய நிறைய வழிகள் உண்டு. அதில் சில; கபடி, நீச்சல், கோட்டி-புல் ஆகும். மற்ற விளையாட்டுக்கும், மேற்சொன்னவைக்கும் ஒரு வித்தியாசமுண்டு. மற்ற விளையாட்டுகளில் மூச்சின் ஓட்டம் சீராக இருக்காது. உள்ளிழுப்பும், வெளிவிடுதலும் அதிமாக இருக்கும். ஆனால், யோகத்தின் மூச்சி பயிச்சியில், உள்ளிழுப்பு வேகமாகவும், வெளிவிடுதல் மெதுவாகவும் இருத்தல் வேண்டும். இப்போது, மேல் சொன்ன விளையாட்டுகளின் மூச்சு விடுதல் பண்பு புரியும்.
அதேபோல, பாட்டு பாடும் போதும், யோகத்தின் மூச்சு பயிற்சி பண்பு வெளிப்படும். நம்மில் பலர் (என்னையும் சேர்த்து) பாட்டு பாடுதலில் ஆர்வம் இருந்தும், பாட முயலுவதில்லை. ஏனெனில், நமக்கு அதில் பயிற்சியில்லை என்று ஒரு அச்சம், வெட்கம். நாம் வெறும் தனிமை பாடகர்களாகவே இருக்கிறோம். அதுவும் நன்றே.
நாம் எப்படி பாடுகிறோம் என்பது முக்கியமில்லை. பாடும்போது மூச்சின் ஓட்டத்தை சரியாக வைத்து கொள்கிறோமா என்பது தான் முக்கியம். பாட்டு பாட முயலும் போது, மூச்சு அடக்கம் தேவைப்படும். அதனால் நிறைய காற்றை உள்ளிழுப்போம். தொடந்து பாட வேண்டி, மெதுவாக காற்றை விடுவோம். இந்த செயல் மிக சாதாரணமாக நடக்கும். இந்த செயலே யோகத்தில் (ஒரு வகை) மூச்சு பயிச்சியாகும்.
இனி நிறைய பாட்டு வாய்விட்டு பாடுவோம், மூச்சி பயிற்சி செய்வோம், காற்றுப்பையை (Lungs) விரிவடையச் செய்வோம்.