Archive

Posts Tagged ‘love’

அன்பு

December 11th, 2014 No comments

பிந்தியாவின் தமிழ் வீட்டுபாடத்திற்காக எழுதியது:

தாயின் அன்பு பாசமானது,
தந்தையின் அன்பு அறிவானது,
குருவின் அன்பு கல்வியானது,
தெய்வத்தின் அன்பு வாழ்வானது,
அன்பு நிறைந்த மனிதம் இறைவனாவது திண்ணமே!!

பாடல்கள் கேட்கும்போது காதலுணர்வு வருமா?

April 16th, 2013 No comments
புறத்தே புலனால் அரும்பும் காமம்;
அகத்தே ஆழத்தே ஊறும் அன்பு;
காமத்தோடு இசைந்த அன்பு காதலாகிவிட,
செவியோடு கசியும் இனிய பாடல் ஒன்று
அக்காதலை தூண்டுவது நியாயம்தானே!
Tags: , , , ,

கனா கண்டேன்..

June 22nd, 2012 No comments

மதியினில் மாயமென மனதினில் மோகமென
மதியாய் முன்னிறங்கி மோன முடைபட
மத்தியில் மூச்சுமின்றி மத்தாய் முறுங்கிட
முக்தியில் நின்பிறைதனில் மறை கண்டேனே!

Tags: , , , ,

Mother

July 31st, 2011 No comments

தாயின் பெருமைகளை என் தாய் எனக்குச் சொல்ல, இங்கே அதை தொகுத்துள்ளேன்.

 1. தாயில் சிறந்த கோவிலும் இல்லை
 2. தாயின் மடி மீண்டும் அமரமுடியாத சிம்மாசனம்
 3. குழந்தையின் எதிர்காலம் தாயின் கையில்தான் உள்ளது
 4. எல்லோரது இடத்தையும் தாய் வகிக்க முடியும், ஆனால் தாயின் இடத்தை வகிக்க வேறு எவராலும் முடியாது
 5. 1 கோடி போதனையை விட ஒருதுளி தாய்மை மேலானது
 6. மண்ணில் நல்லவனாக வாழவைப்பதும், நானிலத்தில் புகழ் பெற செய்வதும் தாய்தான்
 7. தாயை எதனோடும் ஒப்பிடுதல் கூடாது. ஏனெனில் அவள் ஈடுஇணை அற்றவள்
 8. உலகம் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயை ஒரு தட்டிலும் வைத்து தராசில் நிறுத்தால் உலகின் தட்டுதான் மேலே இருக்கும்
 9. தாயின் இதயம்தான் குழந்தைகளின் பள்ளிக்கூடம்
 10. நல்ல தாயை அடைந்தவன் தான் சாதனைகளைப் படைத்து பெரிய மனிதனாக உருவெடுக்கிறான்
 11. தாயின் உள்ளத்தை அறிந்தவன் கடவுளின் கருணையை அறிந்தவன்
 12. வாஞ்சையுள்ள இதயதைப் பெற்றவளே தாயாவாள்
 13. தாயை வணங்குபவனுக்கு தெய்வம் வழிகாட்டும்
 14. தாய் எங்கிருக்கிறாளோ அந்த இடம் சொர்கம்
 15. தாயின் கண்ணீரை துடைப்பவனே சிறந்த மகன்
 16. அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் உதவாதவன்
 17. அன்னையின் அன்பிற்கு அளவில்லை
 18. தாயை பிரிந்த மகன் வெறும் கூடுதான்

நேனு நூவண்ட்டு வேரய் புனா… (படம்: அரஞ்ச், தெலுங்கு, 2010)

January 11th, 2011 No comments

இந்த பாடலில் மெட்டு எனக்கு மிகவும் பிடித்தது, ஹாரிஸ் ஜெயராஜ் என்றால் சொல்லத்தான் வேண்டுமோ? கீழே என்னுடைய பாடல் வரிகளை தொகுத்துள்ளேன். அசல் பாடலின் அர்த்தம் எனக்கு தெரியாது, எனக்குத் தோன்றிய கருத்தை மெட்டில் அமர்த்தியிருக்கிறேன்.

(பல்லவி)
சாலை எங் கெங்கும்
உன்னை தேடும்
என்
விழியில்
தூறல் துளிகள் உருகுதே,
உனை
நாடித் தழுவ தவிக்குதே,
மனம்
கொள்ளை கொண்ட என் கள்வனே…

மோகம் கசிந் துருகும்
மாலை நேரம்,
உன்
நிழலின்
பிம்பம் பற்றி நின்றேனே,
உனை
சொந்தம் என்று கொண்டனே,
வரம்(ந்)
தன்னை தந்த என் மன்னனே…

உந்தன் பார்வையாலே இங்கு பெண்ணாகி,
உந்தன் வார்த்தை கேட்டு உளம் ஒன்றாகி;
எந்நெஞ்சுக் கூட்டில் உன்னை வைத்தேனே..

என் பார்வை என்றுமே உனைத்தேட,
உன் பார்வை பார்த்தும் ஒளிந்தோட,
என் கண்ணக்குழியில் உன்னை விதைத்தேனே..

சாலை எங் கெங்கும்
உன்னை தேடும்
என்
விழியில்
தூறல் துளிகள் உருகுதே,
உனை
நாடித் தழுவ தவிக்குதே,
மனம்
கொள்ளை கொண்ட என் கள்வனே…

(சரணம் 1)
துணை வரும் உந்தன் கரம்
நிந்தோளில் சாயும் எந்தன் சிரம்
பாதை தோறும் உன்னால் என்றும் பூங்கா வனம்..

தேங்கும் எந்தன் அன்பின் வளம்
சேரும் இடம் உந்தன் அகம்
நம் மனம் சேரும் வாழ்வில் என்றும் சுகம் தினம்..

என் கனவில் வருவது எல்லாம்
உன் முகம்தான்
வேறில்லை
கண் விழித்து பார்ப்பதும் உன்னை
உன் அன்பின் அணைப்பில் இன்னல் மறப்பேனே..

(பல்லவி)
மோகம் கசிந் துருகும்
மாலை நேரம்,
உன்
நிழலின்
பிம்பம் பற்றி நின்றேனே,
உனை
சொந்தம் என்று கொண்டனே,
வரம்(ந்)
தன்னை தந்த என் மன்னனே…

(சரணம் 2)
துணை வரும் உந்தன் கரம் (to be replaced)
நிந்தோளில் சாயும் எந்தன் சிரம்
பாதை தோறும் உன்னால் என்றும் பூங்கா வனம்..

தேங்கும் எந்தன் அன்பின் வளம் (to be replaced)
சேரும் இடம் உந்தன் அகம்
நம் மனம் சேரும் வாழ்வில் என்றும் சுகம் தினம்..

கண் மணியில் இருப்பதும் நீதான்
என் தலைவா
பொய்யில்லை
நான் போகும் திசையெல்லாம் நீதான்
என் பாதை என்றும் உன்னை சார்ந்தேதான்..

(பல்லவி)
சாலை எங் கெங்கும்
உன்னை தேடும்
என்
விழியில்
தூறல் துளிகள் உருகுதே,
உனை
நாடித் தழுவ தவிக்குதே,
மனம்
கொள்ளை கொண்ட என் கள்வனே…

மோகம் கசிந் துருகும்
மாலை நேரம்,
உன்
நிழலின்
பிம்பம் பற்றி நின்றேனே,
உனை
சொந்தம் என்று கொண்டனே,
வரம்(ந்)
தன்னை தந்த என் மன்னனே…

உந்தன் பார்வையாலே இங்கு பெண்ணாகி,
உந்தன் வார்த்தை கேட்டு உளம் ஒன்றாகி;
எந்நெஞ்சுக் கூட்டில் உன்னை வைத்தேனே..

என் பார்வை என்றுமே உனைத்தேட,
உன் பார்வை பார்த்தும் ஒளிந்தோட,
என் கண்ணக்குழியில் உன்னை விதைத்தேனே..

(standby)
தினம் உன்னை காணவே துடிப்பேனே
உந்தன் உள்ளங் கையினுள் புதைவேனே
மானம் காக்கும் வீரம் உனதாமோ?

Powered by ScribeFire.

Tags: , , , ,

காதல்

March 6th, 2010 No comments

கீழ் கண்ட இப்பாடலை “கோவா” படத்தில் வரும் “இது வரை” என்ற பாடலின் மெட்டில் பாடி பார்க்கவும்.

இருவிழி கொண்டாடும் கனவிது;
இதயத்தில் நின்றாடும் இசையிது;
கருத்தினில் கண்மூடி கரைந்திட காத்து கிடந்தேனே.. (2)

தூங்காமல் தூங்கி சரிந்தது,
பார்க்காமல் பார்க்க துடித்தது,
பேசாமல் பேசி ரசித்தது,
அன்றே ??
தீண்டாமல் தீண்டி தவித்தது,
தாண்டாமல் தாண்டி சிரித்தது,
வேண்டாமல் வேண்டி கொடுத்தது,
இன்றே ??

உள்ளத்துள்ளே உன்னைத்தேடி அலைய,
உன்னைக்கண்டு உலகத்தை மறக்க,
உயிரிலும் உணர்விலும் கலந் திருந்தாயே..
எண்ணத்துள்ளே என்னையறியாமல் தாண்டவமாடி களித்தாய்,
என்னை தூங்கவிடாமல் துளிர்த்தாய்,
இதுசுகமென வேண்டி என்னைத்தேடி தொலைந்தேனே..

எண்ணங்களின் எல்லையிலே இருந்தேன்,
எல்லைதாண்டும் உந்தன் உணர்வறிந்தேன்,
எனைத்தேடும் உந்தன்பார்வை ஆட் கொள்ளுதே..
என்னையீர்க்கும் உன்னுடைய அன்பு என்னைமீறி செல்லும்,
அது என்னை உன்னடி சேர்க்கும்,
இதுசுகமென வேண்டி என்னைத்தந்து களித்தேனே..

சிறகெனும் சிற்றாடை சுகமிது;
பிறவியின் பற்றான துதியிது;
உறவினில் உன்னோடு உறைந்திட ஏங்கி தரித்தேனே.. (2)

பாவை நான்-உன்னகம் விழுந்தேன்,
பார்வை-அதை உன்னிடம் தொலைத்தேன்,
பூவை-நான் எனமனம் துறந்தேன்,
இன்றே! .. (2)

Powered by ScribeFire.

காதல் தோல்வியும் நன்மைக்கே

October 19th, 2009 No comments

எங்கோ பிறந்தேன்,
எப்படியோ வளர்ந்தேன்,
எதற்கு என்றறிவதற்கு முன்பே
காதல் கொண்டேன்,
பொய் பல பகர்ந்தேன்,
மெய் பல துலைத்தேன்,
நான் மட்டும் என்றேன்,
அவளும் அப்படியே என்றாள்,
காதல் கசந்தது,
தனித்தேன்,
துவண்டேன்,
நண்பர்களை அடையாளம் கண்டேன்,
என்னையும் அடையாளம் கண்டேன்,
பார்வையை சற்று திருப்பினேன்,
வாழ்வின் வெளிச்சம் புலப்பட்டது,
காலம் கைகொடுத்தது,
புத்துணர்ச்சி கொண்டேன்,
வெற்றி கண்டேன்.

Powered by ScribeFire.

காதலிங்கள்

July 9th, 2009 No comments

காதல், தன்னுள் இருக்கும் ஆணவத்தை அறிய ஒரு அற்புதமான கருவி.  அதுவும், காதலிக்கப் படவேண்டும் என்ற எண்ணம், ஆணவத்தின் உச்சக்கட்டம். காதலில், அன்பும், காமமும் அடக்கம், நான் என்ற எண்ணமும் அடக்கம். காதலில் தோல்வி அடைந்த அனைவரும் ஆணவத்தின் ஆட்சியை அறிந்தவர்கள்.  ஏனெனில், என்னை விலக்கிவிட்டார்களே என்ற எண்ணம், அவ்வளவு வலித்திருக்கும்.  இந்த வலி, ஆணவத்திற்கு கிடைத்த வெற்றி; ஆனால் தன்னை அறியும் முயற்சிக்கும் அது வெற்றியே.  ஆணவத்தை கூர்ந்து கவனிக்க, ஆணவம் கரையும், குரோதம் விலகும், அமைதி பிறக்கும், ஆனந்தம் நிறையும்.

Powered by ScribeFire.

Tags: , ,