Archive

Posts Tagged ‘highway’

Only Coffee

April 11th, 2010 No comments

NH45 தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது மறவாமல் மதுராந்தகத்தின் சாலையோரம் இருக்கும் “Only Coffee” என்ற தேனீர்விடுதியில் காப்பி அருந்திப்பாருங்கள். இந்த விடுதி சரியாக “Highway Inn”க்கு எதிர்புறமாக இருக்கிறது. நேற்று இங்கே காப்பி குடிக்கும்போது ஏன் இந்த இடத்தை தேர்தெடுத்தார்கள் என்று சிந்தித்தேன். இப்போது புரிகிறது, சரியாக அடையாளம் காட்டதான் போல.

கும்பகோணம் டிகிரி காப்பி, அவ்வளவு அருமையாக இருக்கும் என்று இப்போதுதான் தெரிந்துக்கொண்டேன். ஒரு காப்பி ரூ10, ஆனால் சரியான விலைதான் போல, சுவையை கருத்தில் கொண்டால்.