Archive

Posts Tagged ‘friend’

என் கற்பனைத் தோழி

June 25th, 2009 No comments

எனக்கு ஒரு தோழியுண்டு,
அவளுக்கு என் மீது மிகுந்த அன்புண்டு;

அவளை எனக்கு மிகப்பிடிக்கும்,
அவளுக்கும் என்னை மிகப்பிடிக்கும்;
என் சொல்லை அவள் தட்டமாட்டாள்,
அவளுக்காக நான் எதுவும் செய்வேன்;
குறுதிப்பற்றல்ல,
ஸ்தூலபற்றுமல்ல,
உயிர்பற்றுமல்ல,
ஏதோ ஒரு ஏக யுணர்வு;

அவளை பார்க்க தேவையில்லை,
அவளுடன் பேசத்தேவையில்லை,
அவளருகிலும் வேண்டியதில்லை,
ஆனாலும் அவளை யுணர முடிகிறது;

என் எண்ணங்கள்,
அவளை காத்து நிற்கும்,
அவளை வழி நடத்தும்,
அவளுக்கு பூரணத்துவ மளிக்கும்,
அவளை ஞானியாக்கும்;

அவள் என்னுடைய தோழி,
என்னுடைய ஒரே அன்புத்தோழி!

வெல்வாய் நீ தோழா..

April 19th, 2009 No comments

உனக்கு தோள்கொடுக்க தோழன் இருக்கிறேன்,
எதற்கும் கலங்காதே,
யாருக்கும் மயங்காதே,
நீ சாதிக்கப்பிறந்தவன்,
தளராதே,
துவளாதே
சோர்வு நம் எதிரி,
விழித்தெழு,
வல்லமையோடிரு,
புன்னகை பூத்திரு,
காலத்திற்கு காத்திரு,
அகத்தே உறுதிபூண்டிரு,
அளவான அகந்தையோடிரு,
அளவற்ற அன்போடிரு,

உன்னால் ஏதும் முடியும்,
நீ வெல்வாய்;

Powered by ScribeFire.