Archive

Archive for the ‘Temples’ Category

கொங்குநாட்டு தேவார சிவஸ்தலங்கள் பார்த்தாகிவிட்டது

September 16th, 2012 No comments
இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்
1. சங்கமேஸ்வரர் திருநணா (பவானி)
2. அர்த்தநாரீஸ்வரர் திருச்செங்கோடு
3. பசுபதிநாதர் கருவூர் (கரூர்)
4. திருமுருகநாதசுவாமி திருமுருகப்பூண்டி
5. கொடுமுடிநாதர் திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
6. அவிநாசியப்பர் திருப்புக்கொளியூர் (அவிநாசி)
7. விகிர்தநாதேஸ்வரர் வெஞ்சமாக்கூடல்

நன்றி shivatemples.in மற்றும் shaivam.org

தொண்டைநாடு நிறைவுற்றது..

February 21st, 2011 No comments

தொண்டை நாட்டின் அனைத்து (31) தேவாரப் பாடல் பெற்ற ஆலயங்களையும் தரிசனஞ்செய்து பெரும்பேறு பெற்றேன். www.shivatemples.com மற்றும் www.shaivam.org க்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவன் பெயர் சிவஸ்தலம் இருப்பிடம்
1. ஏகாம்பரேஸ்வரர் கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்)
2. திருமேற்றளிநாதர் திருக்கச்சி மேற்றளி
3. ஓணகாந்தேஸ்வரர் திருஓணகாந்தான்தளி
4. அநேகதங்கா பதேஸ்வரர் கச்சி அநேகதங்காபதம்
5. காரை திருநாதேஸ்வரர் கச்சிநெறிக் காரைக்காடு
6. வாலீஸ்வரர் திருகுரங்கணில் முட்டம்
7. அடைக்கலம்காத்த நாதர் திருமாகறல்
8. வேதபுரீஸ்வரர் திருவோத்தூர்
9. பனங்காட்டீஸ்வரர் திருப்பனங்காட்டூர்
10. வில்வநாதேஸ்வரர் திருவல்லம்
11. மணிகண்டேஸ்வரர் திருமாற்பேறு
12. ஜலநாதேஸ்வரர் திருஊறல் (தக்கோலம்)
13. தெய்வநாதேஸ்வரர் இலம்பையங்கோட்டூர்
14. திரிபுரநாதர் திருவிற்கோலம்
15. வடாரண்யேஸ்வரர் திருவாலங்காடு
16. வாசீஸ்வரர் திருப்பாசூர்
17. ஊண்றீஸ்வரர் திருவெண்பாக்கம்
18. சிவானந்தேஸ்வரர் திருக்கள்ளில்
19. ஆதிபுரீசர், படம்பக்கநாதர் திருவொற்றியூர் (சென்னை)
20. வலிதாய நாதர் திருவலிதாயம்
21. மாசிலாமனி ஈஸ்வரர் திருமுல்லைவாயில்
22. வேதபுரீசர் திருவேற்காடு
23. கபாலீஸ்வரர் திருமயிலை (சென்னை)
24. மருந்தீஸ்வரர் திருவான்மியூர் (சென்னை)
25. விருந்திட்ட ஈஸ்வரர் திருக்கச்சூர் ஆலக்கோவில்
26. ஞானபுரீஸ்வரர் திருஇடைச்சுரம்
27. வேதகிரீஸ்வரர் திருக்கழுகுன்றம்
28. ஆட்சீஸ்வரர் அச்சிறுபாக்கம்
29. சந்திரசேகர் திருவக்கரை
30. அரசிலிநாதர் திருஅரசிலி
31. மாகாளேஸ்வரர் இரும்பை மாகாளம்

கச்சி திருநெறிக்காரைக்காடு

October 21st, 2010 No comments

காஞ்சி மாநகர் சரித்திர காலத்திற்கு முன்பே தோன்றி புராண இதிகாசங்களிலும் சைவ, வைணவ, பெளத்த, சமண காவியங்களிலும் இந்நகர் சிறப்பிக்கப்பட்டுள்ளது. தொண்டை நாட்டு தலங்களுள் காஞ்சிபுரம் முதன்மை வாய்ந்தது. இது உலகிலேயே மிகப் பழமை வாய்ந்த நகரங்களுள் ஒன்றாக மதிக்கத்தக்க மாட்சிமையுடையது. “நகரேஷு காஞ்சி” என்று மகாகவி காளிதாசராலும், “தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சி” என்று மாணிக்கவாசகப் பெருமானும், “கல்வியிற்கரையிலா காஞ்சி நகரம்” என்று திருநாவுக்கரசரும், “காஞ்சியை நினைப்பீர் காசிக்கடிநகர் வசித்த பேறாம்” என காஞ்சிப் புராணமும் போற்றுகின்றது. மனிதனின் அன்றாட வாழ்க்கையில் இறைவுணர்வு மேலிட பிறக்க, இருக்க, நினைக் தரிசிக்க இறக்க முக்தி அளிக்கின்ற தலங்களில் ஒன்றாக விளங்குவது காஞ்சி தலமாகும். பஞ்ச பூத தலங்களில் மண் தலமாக விளங்குவது காஞ்சி நகரமாகும்.

கா என்றால் பிரமன், அஞ்சித்தல் என்றால் பூசித்தல், புரம் என்றால் நகரம். பிரம்ன் சிவனை பூசித்த நகரம் ஆதலால் காஞ்சிபுரம் என் பெயர் பெற்றது. காஞ்சியில் உள்ள சிவாலயங்களில் எங்கும் அம்பாள் சன்னதி தனியாக கிடையாது. ஏனெனில் அனைத்து சிவாலயங்களுக்கும் அன்னை காமாட்சி தான் அம்பாளாக விளங்குகிறாள். இந்த சிறப்பு இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. இந்தியாவில் உள்ள 108 வைணவ திவ்யதேசங்களில் காஞ்சியில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 14 வைணவ தலங்கள் உள்ளது மிகவும் சிறப்பாகும்.

Powered by ScribeFire.

பனங்காட்டு ஈஸ்வரர் கோவில், திருவன்பார்த்தான் பனங்காட்டுர்

May 17th, 2009 No commentsகாஞ்சிபுரத்திலுருந்து சுமார் 7 கிமி வந்தவாசி சாலையிலில் செல்ல, ஐயன்குளம் கூட்டுசாலை வரும்.  அதில் வலப்புறம் திரும்பி சுமார் 7 கிமி நேராக செல்ல, திருப்பனங்காட்டூர் குருக்கு சாலை சந்திப்பு வரும். அதில் வலப்புறம் திரும்பி சுமார் 2 கிமி சென்றால் திருப்பனங்காடு கிராமம் வரும், சற்றே கடந்துச்செல்ல ஆலயம் வரும்.  இவ்வாலயத்தில் இரண்டு மூலவர் லிங்கம் உண்டு ஒன்று அகத்திய முன் ஸ்தாபித்தது, மற்றொன்று அகத்தியரின் சீடர் புலத்தியர் ஸ்தாபித்த்து.  வரலாறு அறிய http://www.shivatemples.com/tnaadut/tnt09.html சுட்டவும்.

இந்த ஆலயத்தில் ஒரு விந்தையுள்ளது.  வெளி அடுக்கிலுள்ள ஒரு தூணில் ராமன் அம்பு எய்ய ஆயத்திருப்பதுபோல் ஒரு சிற்பம் உள்ளது.  உள்ளிலுள்ள அடுக்கிலுள்ள ஒரு தூணின் வாலி-சுக்ரீவன் சண்டையிடுவதுபோல் ஒரு சிற்பம் உள்ளது.  ராமனிடமிருந்து பார்த்தால், வாலி-சுக்ரீவன் தெளிவாகத்தெரியும்.  வாலி-சுக்ரீவன் இடத்திலிருந்து பார்த்தால் ராமன் மொத்தமாகத் தெரியவில்லை.  என்ன அருமையாக கட்டிடகலையில் அசத்தியிருக்கிறார்கள்!!

வாலீஸ்வரர் கோவில், திருகுரங்கணில் முட்டம்

May 17th, 2009 No comments

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் சுமார் 9 கிமி தொலைவில் இருக்கும் தூசி கிராமத்தில் பிரிந்து சுமார் 2 கிமி கடந்து செல்ல திருகுரங்கணில் முட்டம் கிராமம் வருகிறது.  இந்த கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது.  இங்கு குரங்காக மாறிய வாலிக்கும், அணிலாக மாறிய இந்திரனுக்கும், காகமாக மாறிய எமனுக்கும் ஈசன் சாபவிமோசம் அளித்துள்ளார் என்பது ஐதீகம்.  கோயிலின் வாயிலில் குரங்கு, அணில், காகம் இறைவனை பூசிப்பதை காணலாம்.  http://www.shivatemples.com/tnaadut/tnt06.html

காஞ்சிபுரத்திலிருந்து Collector அலுவலகம் வழியே செல்லவேண்டும்.  வந்தவாசி சாலை குறுகியது.  சுமார் 4 கிமி சென்ற பிறகு பாலாற்றின் மீதமைந்துள்ள பாலத்தை கடக்கவேண்டும்.  சிறிது தூரம் சென்றபின் ஐயன்குளம் கூட்டுசாலை வரும்.  அதைகடந்து செல்ல தூசி கிராமம் வரும்.  ஆங்கு இடதுபுரம் திரும்பி சுமார் 1 கிமி செல்ல தூசி கிராமம் எல்லை வரும்.  அதிலிருந்து சுமார் 1.5 கிமி கடக்க குரங்கணில் முட்டம் வரும்.

ஆலயத்தின் குருக்கள்,  திரு KM Sridhar (9600787419, 9629050143, 044-27242409) மிக அருகே இருக்கிறார். 

சிவன் சொத்து குல நாசம்..

May 13th, 2009 No comments

“சிவன் சொத்து குல நாசம்” என்று ஒரு பழமொழியுண்டு.  இதற்கு கற்பிக்கப்படும் பொருள் என்னவென்றால், சிவாலயத்தின் சொத்துக்களின் மேல் ஆசைப்படுவது தண்டிக்கப்படும் குற்றம்.  என் தந்தையும், குருவும் எனக்கு கற்றுக்கொடுக்கும் போது, சிவாலயத்திலிருந்து விபூதி தவிர வேறெதுவும் கொண்டு செல்லக்கூடாது என்றனர்.

நன்று ஆராய்ந்து பார்த்தால், இந்த பழமொழியுன் பொருள் இன்னும் ஆழமானது என்பது புரியும்.  நான் கடைசியாக யாருக்கோ இதைபற்றி சொல்லும்போதுதான் எனக்கு இந்த ஆழ்கருத்து புலப்பட்டது.

அதாவது, சிவன் சொத்து என்பது ஆலயத்தை மட்டும் குறிக்காது.  அது இவ்வுலகத்தையே குறிக்கும். இவ்வுலக வாசனைகளால், ஆனந்தம் எப்போது அகப்படாது என்பதே ஆழ்கருத்தாகும்.  உலக வாசனைகளை துறப்பது எளிதன்று, ஆனாலும் முடியாததும் அன்று.  ஆசைகளை மறுக்கக்கூடாது, ஆசைகளை அவை உதிக்கும் இடத்திலேயே வேறருக்கவேண்டும்.  அதற்கு முதற்படி, “என்னிடம் எல்லாம் உள்ளது என்று நம்பத்தொடங்குங்கள்”.  எல்லாமே, என்னிடம் இருக்கும்போது எனக்கு ஆசைகள் கிடையாதல்லவா?  அடுத்தப்படியாக, “நானே எல்லாம், எல்லாவுமே நான் தான்” என்று உணருங்கள்.  அமைதி பிறக்கும், ஆனந்தம் நிலைக்கும்.

திருவிற்கோலம், திரிபுராந்தக சுவாமி

May 11th, 2009 No comments
திருவிற்கோலம் (தற்போது கூவம்) கிராமத்திலுள்ள திரிபுராந்தக சுவாமி அல்லது தீண்டாத் திருமேனி நாதர் பெருமானை காண நேற்று எனது thunderbirdல் சென்றேன்.  http://www.shivatemples.com/tnaadut/tnt14.html

இந்த ஆலயத்தில் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.  இந்த ஆலயம், கூவம் நதியில் மூலத்தில் அமைந்துள்ளது.  ஆலயத்தின் குளம் அக்னி தீர்த்தமாகும்; இதில் வித்தியாசம் என்னவென்றால், இந்த குளத்தில் ஒரு தவளை கூட கிடையாது.  ஆலயத்தில் மூலவரான சிவலிங்கம் தீண்டப்படாதது; ஏனெனில் இது நிறம் மாறக்கூடியது.  வெள்ளை நிறமாக மாறும் போது மழைவருமாம், மற்றும் நினைத்த காரியம் நிறைவேறுமாம்.   இவ்வாலயம் தெற்கு பார்த்த கோபுரத்தை கொண்டது.  ராஜ கோபுரம் தற்போது கட்டப்பட்டது தான்.  ஆலயத்தை நிர்வகிப்பது திரு ராஜேந்தின் (9381846515).

இந்த கோயிலுக்கு செல்ல, திருவள்ளூர் தாண்டி திருப்பாச்சூரில் இடப்பக்கம் திரும்பி சுமார் 14 கிமி செல்ல கடம்பத்தூர் தாண்டி பேரம்பாக்கம் வரும். பேரம்பாக்கத்திலிருந்து சுமார் 3 கிமி தொலைவில் கூவம் கிராமம் வரும். பேரம்பாக்கத்திலுருந்து கூவம் கிராமம் செல்லும் வழியில் கூவம் நதியை புண்ணிய நதியாக காணலாம் (மழை காலங்களில் மட்டும் தான் நீரோட்டம் இருக்கும்).

சிவன் துதி

May 3rd, 2009 No comments

சிவாய வசி எண்ணவும் செபிக்க, இச்சகம் எலாம்;
சிவாய வசி எண்ணவும் செபிக்க, யாவும் சித்தியாம்;
சிவாய வசி எண்ணவும் செபிக்க, வானம் ஆளளாம்;
சிவாய வசி என்பதே, இருதலை தீ யாகுமே!

Powered by ScribeFire.

திருகண்டலம்

February 12th, 2009 No comments


திருகண்டலம் திருக்கோயில்


திருகண்டலம் செல்லும் சாலை..

Powered by ScribeFire.