Three Worlds


தாயின் பெருமைகளை என் தாய் எனக்குச் சொல்ல, இங்கே அதை தொகுத்துள்ளேன்.

“I am not obligated” என்று விட்டேத்தியாக இருந்துவிடுவது எளிது, ஆனால் இந்த குணத்தால் நண்பர்களை இழக்க நேரிடலாம். இருப்பினும், பொறுப்புகளுக்கும்(responsibilities) வேண்டுகோள்களை ஏற்பதற்கும்(being obligated) வேறுபாடு உண்டு என்பதை உணர்ந்து நடந்தால், திறமையாக நிலைமையை சமாளிக்கமுடியும் என்பதில் ஐயமில்லை.

தொண்டை நாட்டின் அனைத்து (31) தேவாரப் பாடல் பெற்ற ஆலயங்களையும் தரிசனஞ்செய்து பெரும்பேறு பெற்றேன். www.shivatemples.com மற்றும் www.shaivam.org க்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
| இறைவன் பெயர் | சிவஸ்தலம் இருப்பிடம் | |
|---|---|---|
| 1. | ஏகாம்பரேஸ்வரர் | கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்) |
| 2. | திருமேற்றளிநாதர் | திருக்கச்சி மேற்றளி |
| 3. | ஓணகாந்தேஸ்வரர் | திருஓணகாந்தான்தளி |
| 4. | அநேகதங்கா பதேஸ்வரர் | கச்சி அநேகதங்காபதம் |
| 5. | காரை திருநாதேஸ்வரர் | கச்சிநெறிக் காரைக்காடு |
| 6. | வாலீஸ்வரர் | திருகுரங்கணில் முட்டம் |
| 7. | அடைக்கலம்காத்த நாதர் | திருமாகறல் |
| 8. | வேதபுரீஸ்வரர் | திருவோத்தூர் |
| 9. | பனங்காட்டீஸ்வரர் | திருப்பனங்காட்டூர் |
| 10. | வில்வநாதேஸ்வரர் | திருவல்லம் |
| 11. | மணிகண்டேஸ்வரர் | திருமாற்பேறு |
| 12. | ஜலநாதேஸ்வரர் | திருஊறல் (தக்கோலம்) |
| 13. | தெய்வநாதேஸ்வரர் | இலம்பையங்கோட்டூர் |
| 14. | திரிபுரநாதர் | திருவிற்கோலம் |
| 15. | வடாரண்யேஸ்வரர் | திருவாலங்காடு |
| 16. | வாசீஸ்வரர் | திருப்பாசூர் |
| 17. | ஊண்றீஸ்வரர் | திருவெண்பாக்கம் |
| 18. | சிவானந்தேஸ்வரர் | திருக்கள்ளில் |
| 19. | ஆதிபுரீசர், படம்பக்கநாதர் | திருவொற்றியூர் (சென்னை) |
| 20. | வலிதாய நாதர் | திருவலிதாயம் |
| 21. | மாசிலாமனி ஈஸ்வரர் | திருமுல்லைவாயில் |
| 22. | வேதபுரீசர் | திருவேற்காடு |
| 23. | கபாலீஸ்வரர் | திருமயிலை (சென்னை) |
| 24. | மருந்தீஸ்வரர் | திருவான்மியூர் (சென்னை) |
| 25. | விருந்திட்ட ஈஸ்வரர் | திருக்கச்சூர் ஆலக்கோவில் |
| 26. | ஞானபுரீஸ்வரர் | திருஇடைச்சுரம் |
| 27. | வேதகிரீஸ்வரர் | திருக்கழுகுன்றம் |
| 28. | ஆட்சீஸ்வரர் | அச்சிறுபாக்கம் |
| 29. | சந்திரசேகர் | திருவக்கரை |
| 30. | அரசிலிநாதர் | திருஅரசிலி |
| 31. | மாகாளேஸ்வரர் | இரும்பை மாகாளம் |
நாயை கண்டாற் கல்லை காணோம், கல்லை கண்டாற் நாயை காணோம்
கீழ்காணும் தலைப்பில் சில எண்ணங்களையும், உணர்வுகளையும், பதிவுசெய்ய வேண்டும். ஆனால் எப்போதி என்று அறியேன்.

Powered by ScribeFire.
One side of the Internet researchers are working on “Internet Anonymization”, an idea to protect one’s identity; on the other hand, Internet giants are pushing “Social Networks” where they build intelligence on the so-called privacy of people. What a weird world !?!

Powered by ScribeFire.
தானுண்டு, தான் மட்டுமே உண்டு என நிலைகொண்டு ஆடும் மனமானது,
தன்னை தாண்டும் நிலைகண்டு தாளாமல் துடித்தெழுப்பும் ஓலமே வசவு;
ஆறக்கூடிய மனம் ஆரவாரமடையும் போது வசவு ஊறும், உருவெடுக்கும்,
ஊற்றெடுத்து உள்ளத்துள்ளே ஊடுருவி நாவின் நுனியின் ஜனிக்கும்,
தாளமில்லா தனித்துதியாகி காலமில்லா நானெனும் இருப்பைத் தூண்டும்,
ஆடிய ஆட்டம் அடங்கியபின் சுவடேதுமில்லாமல் மறைந்துபோகும், மறந்துபோகும்.
….

Powered by ScribeFire.
அசைவம் தவிர்த்தல்,
வாக்கு தவிர்த்தல்,
அச்சம் நீக்கல்,
அவசரம் நீக்கல்,
பந்தம் அறுத்தல்,
எதிர்பார்ப்பு அறுத்தல்,
பற்று அகற்றல்,
குரோதம் அகற்றல்,
ஈர்ப்பு விலக்கல்,
உணர்ச்சி விலக்கல்,
சுவை குறைத்தல்,
பாரம் குறைத்தல்,
நிதானம் கொளல்,
எளிமை கொளல்,இவையாவும் எனக்கருள் நீ பராபரமே..
