Archive

Archive for January, 2011

My First Autobot

January 24th, 2011 No comments

Use Cases

  1. Find power source, remember the location map to optimize search of power sources. (eating). Witricity to be attempted.
  2. Find the sound direction and go to the source of the sound (watching TV, music, etc)
  3. Find light sources and move to that direction (vigilance)
  4. If it is dark everywhere, go to lower power mode (sleep)
  5. Avoid obstacles (walking)
  6. Self test for temperature, current flow, battery strength (fitness check)
  7. Report status to humans only while meeting them (consultation)
  8. Know heights and avoid falling of the floor from steps, tables, sofa, bed, etc. (no jumping)

Sensors needed

  1. Direction sensor
  2. Distance sensor
  3. Temperature sensor
  4. PIR sensor
  5. Odometer
  6. Tachometer
  7. Microphone
  8. IR LEDs and IR sensors
  9. Current sensor
  10. Voltmeters
  11. LDR sensor
  12. RFID

Controller

  1. ATMega 16/32 on the Autobot side
  2. AMD Phenom II 550BE on the PC side
  3. Communication over 415MHz ASK or Xbee

நேனு நூவண்ட்டு வேரய் புனா… (படம்: அரஞ்ச், தெலுங்கு, 2010)

January 11th, 2011 No comments

இந்த பாடலில் மெட்டு எனக்கு மிகவும் பிடித்தது, ஹாரிஸ் ஜெயராஜ் என்றால் சொல்லத்தான் வேண்டுமோ? கீழே என்னுடைய பாடல் வரிகளை தொகுத்துள்ளேன். அசல் பாடலின் அர்த்தம் எனக்கு தெரியாது, எனக்குத் தோன்றிய கருத்தை மெட்டில் அமர்த்தியிருக்கிறேன்.

(பல்லவி)
சாலை எங் கெங்கும்
உன்னை தேடும்
என்
விழியில்
தூறல் துளிகள் உருகுதே,
உனை
நாடித் தழுவ தவிக்குதே,
மனம்
கொள்ளை கொண்ட என் கள்வனே…

மோகம் கசிந் துருகும்
மாலை நேரம்,
உன்
நிழலின்
பிம்பம் பற்றி நின்றேனே,
உனை
சொந்தம் என்று கொண்டனே,
வரம்(ந்)
தன்னை தந்த என் மன்னனே…

உந்தன் பார்வையாலே இங்கு பெண்ணாகி,
உந்தன் வார்த்தை கேட்டு உளம் ஒன்றாகி;
எந்நெஞ்சுக் கூட்டில் உன்னை வைத்தேனே..

என் பார்வை என்றுமே உனைத்தேட,
உன் பார்வை பார்த்தும் ஒளிந்தோட,
என் கண்ணக்குழியில் உன்னை விதைத்தேனே..

சாலை எங் கெங்கும்
உன்னை தேடும்
என்
விழியில்
தூறல் துளிகள் உருகுதே,
உனை
நாடித் தழுவ தவிக்குதே,
மனம்
கொள்ளை கொண்ட என் கள்வனே…

(சரணம் 1)
துணை வரும் உந்தன் கரம்
நிந்தோளில் சாயும் எந்தன் சிரம்
பாதை தோறும் உன்னால் என்றும் பூங்கா வனம்..

தேங்கும் எந்தன் அன்பின் வளம்
சேரும் இடம் உந்தன் அகம்
நம் மனம் சேரும் வாழ்வில் என்றும் சுகம் தினம்..

என் கனவில் வருவது எல்லாம்
உன் முகம்தான்
வேறில்லை
கண் விழித்து பார்ப்பதும் உன்னை
உன் அன்பின் அணைப்பில் இன்னல் மறப்பேனே..

(பல்லவி)
மோகம் கசிந் துருகும்
மாலை நேரம்,
உன்
நிழலின்
பிம்பம் பற்றி நின்றேனே,
உனை
சொந்தம் என்று கொண்டனே,
வரம்(ந்)
தன்னை தந்த என் மன்னனே…

(சரணம் 2)
துணை வரும் உந்தன் கரம் (to be replaced)
நிந்தோளில் சாயும் எந்தன் சிரம்
பாதை தோறும் உன்னால் என்றும் பூங்கா வனம்..

தேங்கும் எந்தன் அன்பின் வளம் (to be replaced)
சேரும் இடம் உந்தன் அகம்
நம் மனம் சேரும் வாழ்வில் என்றும் சுகம் தினம்..

கண் மணியில் இருப்பதும் நீதான்
என் தலைவா
பொய்யில்லை
நான் போகும் திசையெல்லாம் நீதான்
என் பாதை என்றும் உன்னை சார்ந்தேதான்..

(பல்லவி)
சாலை எங் கெங்கும்
உன்னை தேடும்
என்
விழியில்
தூறல் துளிகள் உருகுதே,
உனை
நாடித் தழுவ தவிக்குதே,
மனம்
கொள்ளை கொண்ட என் கள்வனே…

மோகம் கசிந் துருகும்
மாலை நேரம்,
உன்
நிழலின்
பிம்பம் பற்றி நின்றேனே,
உனை
சொந்தம் என்று கொண்டனே,
வரம்(ந்)
தன்னை தந்த என் மன்னனே…

உந்தன் பார்வையாலே இங்கு பெண்ணாகி,
உந்தன் வார்த்தை கேட்டு உளம் ஒன்றாகி;
எந்நெஞ்சுக் கூட்டில் உன்னை வைத்தேனே..

என் பார்வை என்றுமே உனைத்தேட,
உன் பார்வை பார்த்தும் ஒளிந்தோட,
என் கண்ணக்குழியில் உன்னை விதைத்தேனே..

(standby)
தினம் உன்னை காணவே துடிப்பேனே
உந்தன் உள்ளங் கையினுள் புதைவேனே
மானம் காக்கும் வீரம் உனதாமோ?

Powered by ScribeFire.

Tags: , , , ,

நாய் Vs கல்

January 10th, 2011 No comments
நாயை கண்டாற் கல்லை காணோம், கல்லை கண்டாற் நாயை காணோம்

இது அனைவருக்கும் தெரிந்த பழமொழியே. ஆனால் அதனின் உள்ளர்த்தம் என்ன என்றுரைத்தால், நாய் என்பது நாயகனையோ அல்லது நாயகியையோ குறிப்பதாக கொள்ளளாம். சிலைவடிவில் உள்ள நாயகியாகிய உமையும் லிங்க வடிவிலுள்ள நாயகனாகிய ஈசனும் காண்பவர் கண்களுக்கு கல்லாகவும், நாயகமாகவும் காண்போர் கண்களைபொருத்து தெரியும். ஊண்விழிகளில் கல்லாகவும் உணர்வில் நாயகமாகவும் தெரிதல் திண்ணம்.

அழகன்: சங்கீத ஸ்வரங்கள்..

January 10th, 2011 No comments

“அழகன்” படத்தில் வரும் “சங்கீத ஸ்வரங்கள்” அதனுடைய திரைக்கதை, படம் எடுத்த விதம், பாடல்வரிகள், இசை, திரை அமைப்பு மற்றும் தொலைக்காட்சி, சாலைகள், வெளிச்சம் போன்ற மெல்லிய நுணுக்கங்களுக்காக மிகவும் பிரபலமானது.

ஆனால் ஒரு அடிப்படை தவறு இருப்பதை இன்றுதான் உணர்ந்தேன். பாலசந்தர் படங்களில் தர்க்கம் தெளிவாக இருக்கும். இருந்தாலும் இரவு 9 மணியில் இருந்து பகல் 7 மணிவரை battery charge போடாமல் பேசக்கூடிய wireless handset அந்த படத்தின் காலத்தில் இருந்ததாக தெரிவில்லை!