Archive

Archive for October 23rd, 2010

மழை நீர் சேகரிப்பு தொட்டி

October 23rd, 2010 No comments

நான் இருக்கும் அடுக்கத்தில் தண்ணீர் தட்டுபாடு வெயில் காலங்களில் அதிகம், பல நூறு ரூபாய்கள் கொடுத்துதான் தண்ணீர் வாங்கவேண்டியிருக்கும். கடந்த ஆண்டு ஒரு தொட்டி (சுமார் 10000லி) தண்ணீருக்கு ரூ 750 வரை கொடுத்து கொள்முதல் செய்தோம். சக குடியிருப்போர், என்னுடைய உந்துதலின் பெயரில் மழை நீர் சேகரிப்பு செய்ய ஒப்புதல் மற்றும் உபயமும் செய்தனர். என்னுடைய தொட்டியில் வரைபடத்தை இங்கு தொகுத்துள்ளேன்.

முயற்சி #1

சுமார் 4000 ரூபாய் செலவில் அமைத்த தொட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நன்மைகளும், தீமைகளும் இருந்தன. நன்மையெனில், செலவு குறைவு, திட்டப்பணி வேகமாக முடிக்கமுடிந்தது, தண்ணீர் சுத்தமாக வந்தது; தீமைகளெனில், பராமரிப்பு கடினம், compressor motor உடன் ஒத்துபோகவில்லை (மணற்படுகை பிரண்டது), தண்ணீர் வேகம் குறைவு.

முயற்சி #2

சுமார் 8000 ரூபாய் செலவில் அமைத்த தொட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நன்மைகள் மட்டுமே இருந்தன. முதல் திட்டத்தின் தீமைகள்யாவும் களையப்பட்டன. செலவு மட்டும் இரண்டு மடங்கு ஆனது, இருந்தாலும் பராமரிப்பு சுலபம், கப்பிரஸர் மோட்டாருடன் ஒத்துபோதல், தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் செலவு பெரதாகத் தெரியவில்லை.

Powered by ScribeFire.

Tags: