Home > Uncategorized > காலம்… மூச்சு… ஞாலம்…

காலம்… மூச்சு… ஞாலம்…

September 27th, 2009 Leave a comment Go to comments
காலம் ஒரு மாயச் சக்கரம். அது சுழல சுழலத்தான் மாற்றங்கள் எற்படுகின்றன. மாற்றங்கள் அன்றி வேறேதும் மாறாதது அன்று. ஆனால், இந்த மாற்றங்களை உன்னால் வெல்லமுடியும், காலத்தை வெல்வதன் மூலம். காலத்திற்கும், மூச்சிற்கும் ஒரு அழுத்தமான் பந்தமுண்டு. ஒன்றன்றி மற்றொன்று அன்று. மூச்சிருக்கும் வரைதான் காலத்தின் கட்டாயம், மூச்சறுத்தால் காலமும் அறுக்கப்படும். மூச்சறுத்தல் இறப்பை குறிப்பதல்ல, சமாதி நிலையை குறிப்பதாகும். சகஜசமாதி என்றொரு நிலையுண்டு, அந்நிலையில் நிகழ்காலம் மட்டுமே இருக்கும், இறந்தகாலுமும், எதிர்காலமும் இராது. சகஜசமாதியில் மூச்சிருக்காது, ஆனால் சாதாரண மனிதர்களைபோல இருக்கமுடியும். மூச்சில்லாததால், எண்ணங்களும் இருக்காது, காலமும் நிகழ்ந்துகொண்டு மட்டுமே இருக்கும். இந்நிலையை எளிதில் தற்காலிகமாக எவராலும் அடைய முடியும். நிரந்தரமாக இந்நிலையை அடைய பயிற்சியும், முதிர்ச்சியும் வேண்டும்.
வழி என்னவென்றால்; ஒரு அமைதியான இடத்தில் ஒரு சௌகரியமான அமர்ந்தோ இல்லை படுத்துக்கொண்டு இல்லை சாய்ந்துகொண்டோ இருக்கவேண்டியது. பிறகு, உன் மூச்சை கவனிக்க தொடங்கவேண்டும். கவனிப்பது என்றால், அந்த மூச்சு காற்று நாசியிலிருந்து வயரு வரை உள்ளே போவதையும், பிறகு வெளியே வருவதையும் கவனிக்கவேண்டும். இப்படி கவனிக்க தொடங்கியது, உன் மூச்சு நிதானமாவதை உணரமுடியும். மேலும் பயிற்சி மேற்கொள்ள, மூச்சினூடே இதயத்தில் ஒலி பேரொலியாக கேட்கமுடியும். அதாவது, இதயத்துடிப்பு நன்றாக உரக்கக்கேட்கும். மேலும் கவனிக்க, உன் மூச்சு காற்றின் ஓட்டம் குறையதொடங்கும். நல்ல ஒரு ஆனந்த நிலையை அடையும்போது, உன் மூச்சு மிக மிக குறைந்திருப்பதை கண்டு ஆச்சரியமாக இருக்கும். இந்த ஆனந்த நிலைதான் சகஜசமாதி. ஒரு தேர்ந்த ஞானியாகியவன், எப்போதுமே இந்த ஆனந்த நிலையில் நிறைந்திருப்பான். பயிற்சி மேலும் செய்ய, இந்த ஆனந்த நிலையில் நீளம் கூடும்.

Powered by ScribeFire.