Home > Philosophy, Temples > சிவன் சொத்து குல நாசம்..

சிவன் சொத்து குல நாசம்..

“சிவன் சொத்து குல நாசம்” என்று ஒரு பழமொழியுண்டு.  இதற்கு கற்பிக்கப்படும் பொருள் என்னவென்றால், சிவாலயத்தின் சொத்துக்களின் மேல் ஆசைப்படுவது தண்டிக்கப்படும் குற்றம்.  என் தந்தையும், குருவும் எனக்கு கற்றுக்கொடுக்கும் போது, சிவாலயத்திலிருந்து விபூதி தவிர வேறெதுவும் கொண்டு செல்லக்கூடாது என்றனர்.

நன்று ஆராய்ந்து பார்த்தால், இந்த பழமொழியுன் பொருள் இன்னும் ஆழமானது என்பது புரியும்.  நான் கடைசியாக யாருக்கோ இதைபற்றி சொல்லும்போதுதான் எனக்கு இந்த ஆழ்கருத்து புலப்பட்டது.

அதாவது, சிவன் சொத்து என்பது ஆலயத்தை மட்டும் குறிக்காது.  அது இவ்வுலகத்தையே குறிக்கும். இவ்வுலக வாசனைகளால், ஆனந்தம் எப்போது அகப்படாது என்பதே ஆழ்கருத்தாகும்.  உலக வாசனைகளை துறப்பது எளிதன்று, ஆனாலும் முடியாததும் அன்று.  ஆசைகளை மறுக்கக்கூடாது, ஆசைகளை அவை உதிக்கும் இடத்திலேயே வேறருக்கவேண்டும்.  அதற்கு முதற்படி, “என்னிடம் எல்லாம் உள்ளது என்று நம்பத்தொடங்குங்கள்”.  எல்லாமே, என்னிடம் இருக்கும்போது எனக்கு ஆசைகள் கிடையாதல்லவா?  அடுத்தப்படியாக, “நானே எல்லாம், எல்லாவுமே நான் தான்” என்று உணருங்கள்.  அமைதி பிறக்கும், ஆனந்தம் நிலைக்கும்.