என் திருமண வரவேற்பு மடல்

அன்பே மையமாய்
ஆசியே உயிராய்
இன்பமே குறிக்கோளாய்
ஈசனின் தலைமகனே முதலாய்
உயர்வே எண்ணமாய்
ஊக்கமே மொழியாய்
எழுச்சியே மூச்சாய்
ஏகாந்தமே நிலையாய்
ஐம்பூதங்களே துணையாய்
ஒழுக்கமே நெறியாய்
ஓங்காரமே ஆதாரமாய்

எங்கள் இல்லறம் தொடங்குகிறோம்.

இயற்கையின் இனிமைபோல, மழையின் குளுமைபோல
வள்ளுவனின் குறளைப்போல, எங்களை வாழ்த்த தங்களை எங்கள்
திருமண வரவேற்பு விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம்.