Archive

Archive for January 31st, 2009

மெய்யது பொய்

January 31st, 2009 No comments
  1. What you see is what you want to see..
  2. With More Power comes More Responsibilities..
  3. காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா..
  4. மெளனமே மனதின் நிலையான காட்சி..
  5. நடப்பவை எல்லாம் நடக்கவேண்டியவையே..
  6. “நான்” என்னும் இருப்பு மட்டுமே நிரந்தரம்..
  7. இருக்கிறதென்றால் இருக்கிறது; இல்லையெனில் இல்லை..
  8. கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதும், தொடும் உணர்ச்சியும் ஒரு சமிஞ்ஞை மட்டுமே..
  9. |Mental ~ Physical Interpretation| => Fear

Powered by ScribeFire.

Tags:

நம்ப முடியாத விளம்பரங்கள்…

January 31st, 2009 No comments

இந்த விளம்பரம், நான் என்னுடைய Yahoo! Mailன் பக்கவாட்டில் காண்பிக்கப்பட்டது.  இதில் இரண்டு தவறுகள் உள்ளன. 

  • ஒன்று, திருமணமான பயனாளரான எனக்கு, இந்த விளம்பரம் ஏற்றதல்ல.
  • இரண்டு, இந்த விளம்பரத்தில் துளிகூட உண்மையில்லை. 

இதில் காண்பிக்கப்படுகின்ற பெண்கள், பொதுவாக மாடல்கள் (Professional Models).
இவர்கள், உண்மையாகவே திருமணத்திற்கு தயாரான, இணைய தளத்தில் பதிந்த பயனர்களில்லை.

இதை எப்படி சொல்லுகிறேனென்றால்,

  1. அதே படமானது பல மாதங்களாக வருகின்றது. 
  2. அழகான இவர்கள், இத்தனை மாதங்களாக சரியான துணை கிடைக்காமல் இருக்கிறார்கள் என்றால், நம்பக்கூடியாத இல்லை.

இதில் இன்னுமொரு தவறு இருக்கிறது.  இந்த பெண்களின் தொழில், மற்றும் வயதை பாருங்கள். 

  • 21 வயதில் வங்கி மேலாளர் ஆவதற்கு சொந்தமாக வங்கி/கந்து வட்டிக்கடை தொடங்கினால் கூட முடியுமா என்று தெரியவில்லை.
  • 22 வயதில் மனிதவள மேலாளர் ஆவதற்கு வாய்ப்பு சொந்தமாக (அப்பன் மூலமாக) தொழில் தொடங்கினால் மட்டுமே முடியும்.

கேக்கிறவன் கேனையா இருந்தா, “எறும மாடு ஏறோப்லேன் ஓட்டுச்சாம்”..

இப்படித்தான், நம்ப பசங்களை Naukri/Jeevansathi போல பெரிய நிறுவனங்கள் ஏமாற்றுகிறார்கள்.

Powered by ScribeFire.