
இந்த விளம்பரம், நான் என்னுடைய Yahoo! Mailன் பக்கவாட்டில் காண்பிக்கப்பட்டது. இதில் இரண்டு தவறுகள் உள்ளன.
- ஒன்று, திருமணமான பயனாளரான எனக்கு, இந்த விளம்பரம் ஏற்றதல்ல.
- இரண்டு, இந்த விளம்பரத்தில் துளிகூட உண்மையில்லை.
இதில் காண்பிக்கப்படுகின்ற பெண்கள், பொதுவாக மாடல்கள் (Professional Models).
இவர்கள், உண்மையாகவே திருமணத்திற்கு தயாரான, இணைய தளத்தில் பதிந்த பயனர்களில்லை.
இதை எப்படி சொல்லுகிறேனென்றால்,
- அதே படமானது பல மாதங்களாக வருகின்றது.
- அழகான இவர்கள், இத்தனை மாதங்களாக சரியான துணை கிடைக்காமல் இருக்கிறார்கள் என்றால், நம்பக்கூடியாத இல்லை.
இதில் இன்னுமொரு தவறு இருக்கிறது. இந்த பெண்களின் தொழில், மற்றும் வயதை பாருங்கள்.
- 21 வயதில் வங்கி மேலாளர் ஆவதற்கு சொந்தமாக வங்கி/கந்து வட்டிக்கடை தொடங்கினால் கூட முடியுமா என்று தெரியவில்லை.
- 22 வயதில் மனிதவள மேலாளர் ஆவதற்கு வாய்ப்பு சொந்தமாக (அப்பன் மூலமாக) தொழில் தொடங்கினால் மட்டுமே முடியும்.
கேக்கிறவன் கேனையா இருந்தா, “எறும மாடு ஏறோப்லேன் ஓட்டுச்சாம்”..
இப்படித்தான், நம்ப பசங்களை Naukri/Jeevansathi போல பெரிய நிறுவனங்கள் ஏமாற்றுகிறார்கள்.
Powered by ScribeFire.
I have downloaded a lot of videos uploaded by aXXo from mininova.org. Lately, I found that all the videos that I download from aXXo, were getting a blue patch or bunch of green lines while playing in VLC player (0.8.6b). I am not able to take a snapshot of the video to show how bad the patches are. Interestingly, VLC’s snapshot option is giving out the snapshots that are pretty clean. I searched in many places for a solution.. People adviced of a) remove YV12 in ffdshow b) install XVid instead of the MP4 plugins c) disable WMV acceleration d) setting de-interlacing to Discard/Mean in VLC e) reinstall nVidia driver f) reinstall VLC player and many more. I tried all of them and nothing worked out for me.
Finally, I figured out the answer from the following URL:
http://forum.videolan.org/viewtopic.php?f=14&t=41484
The answer is pretty simple.
a. Click on Setting->Preferences
b. Open Video on the Left pane
c. Click on Output Modules
d. On the right hand side, check enable on the “Advanced Options”
e. You will see a pull down menu named “Video Output Module”
f. Select DirectX 3d video output
g. Click on Save
h. Restart VLC.
There you go.. The video plays super smooth.
Still, I am not able to figure out why should I do this to make the video work. The problem is definitely not a codec problem, not a de-interlacing problem.. I am yet to discover what got changed for aXXo’s videos.
Powered by ScribeFire.

தில்லி விமான தளத்தின் கழிவறைகளின் BOSE ஒலிபெறுக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதான் தனியார் வசம் கொடுப்பதின் பலனோ ? GMR குழுதான் தில்லி விமான நிலையத்தை தத்தெடுத்துள்ளனர்.


மேலேயுள்ள படங்கள், தில்லியில் மூடுபனியின் வெறியாட்டத்தின் ஒரு சில உதாரணங்கள்.. யப்பா, என்ன குளிர்.. 5 டிகிரி என்பது எப்படி இருக்கும் என்று இப்போது தான் தெரிந்துக்கொண்டேன்.
Powered by ScribeFire.

என் மகளும் மனைவியும் சேர்ந்து செய்த மலர். அழகாக இருக்கிறதல்லவா ?
Powered by ScribeFire.

நம்முடைய அரசு பொது இடங்களில் புகைபிடிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளது. ஆனாலும், புகை பிடிப்பது குறைந்ததாக தெரியவில்லை. மக்கள், எப்போது போல தான் பொது இடங்களில் புகைபிடிக்கின்றனர். எனெனில், இதை தடுக்கவேண்டியவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பெருபாலானோர் இந்த பழக்கத்திற்கு வீழ்ந்தவர்கள்.
இருக்கட்டும், இந்த படத்தை பாருங்கள். சட்டத்தின் ஓட்டைகளை சாதகமாக்க பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சாக்குகள்.
இந்த துண்டு பிரசுரம், கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில், திருவிழியம்மன் கோயிலின் அருகாமையிலுள்ள பெட்டிக்கடையில் ஒட்டப்பட்டு இருந்தது.
Powered by ScribeFire.
இரண்டு வாரங்களுக்கு முன்னால் IIIT-Hyderabadக்கு ஆட்சேர்ப்புக்காக சென்றிருந்தேன். IIIT ஒரு நிகர் நிலை பல்கலை கழகம் என்பது தெரிந்ததே. ஆனால், தென்னிந்தியாவில் என்னை பொருத்த அளவில் IIITக்கு முதலிடம் கொடுப்பேன். அடுத்தபடியாக VITக்கு கொடுப்பேன்.
Powered by ScribeFire.

இப்படி கூட சோளத்தை சாப்பிடலாமோ…
சொல்லிக்கொடுத்தவர் இதோ..
