Home > Hacks, KnowHow, Programming > STLportன் Allocatorஐ மாற்றுவது எப்படி

STLportன் Allocatorஐ மாற்றுவது எப்படி

August 1st, 2008 Leave a comment Go to comments

STLPort containerகள் Allocatorகளை பயனர்கள் மாற்றியமைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளன. இவை முதன்மையாக Node Allocatorகளை கொண்டுள்ளன. ஆனால், பயனர்களின் விருப்பம்போல, மற்ற Allocatorகளை (முறையே: malloc_alloc, new_alloc, pthread_alloc) உபயோகப்படுத்திக்கொள்ளலாம். மேலும், பயனர்களின் Allocatorகளை (user-defined allocators) உருவாக்கி உபயோகிக்கலாம்.

malloc_alloc, pthread_alloc, new_alloc போன்றவைகளை உபயோகிக்க நீங்கள் STLலை configure செய்ய வேண்டும். அதற்கு stlport/stl/configs/user_config.h (STLport 5.1.5) என்ற கோப்பை கீழ்கண்டவாறு வரியை சேர்க வேண்டும்.

1. malloc_alloc: #define _STLP_USE_MALLOC
2. new_alloc: #define _STLP_USE_NEWALLOC
3. pthread_alloc: #define _STLP_USE_PERTHREAD_ALLOC

உங்களுக்கு debugging விருப்பம் வேண்டுமானால், கீழ்கண்ட வரியையும் சேர்க்கவேண்டும்.

#define _STLP_DEBUG_ALLOC

மேற்கொண்டு அறிந்துக்கொள்ள SGI STL Allocator Design பக்கத்தை பார்க்கவும்.

  1. No comments yet.
  1. No trackbacks yet.
You must be logged in to post a comment.